விஜய்யிடம் கோரிக்கை வைத்த எஸ்ஏசி.. கொஞ்ச நேரம் இப்படியும் பன்னலாம்

விஜய்யின் திரை வாழ்க்கைக்கு பிள்ளையார் சுழி போட்டது அவருடைய தந்தை எஸ் ஏ சந்திரசேகர் தான். 80, 90களில் பிரபல இயக்குனராக இருந்த இவர் நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் தனது மகள் விஜய்யை தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகம் செய்து வைத்தார்.

இதைத்தொடர்ந்த எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் பல படங்களில் விஜய் நடித்து இருந்தார். அதன் பிறகு கடின உழைப்பால் விஜய் யாரும் எட்ட முடியாத உயரத்திற்கு சென்றுள்ளார். அவர் படம் வெளியாகும்போது ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்கின்றனர். இதனால் அவரது படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகிறது.

ஆனால் விஜய்க்கு தனது தந்தை மீது மனக்கசப்பும் உள்ளது. அதாவது விஜய்யின் ரசிகர் மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்ற எஸ்ஏசி முயற்சித்ததால் இவருக்கும் விஜய்க்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. மேலும் அந்தக் கட்சிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என் பெயரை யார் பயன்படுத்தினாலும் வழக்கு போடுவேன் என விஜய் கூறியிருந்தார்.

இதனால் தற்போது வரை எஸ் ஏ சந்திரசேகர்யிடம் விஜய் பேசுவதில்லை, சந்திப்பதில்லை என்ற தகவலும் வெளியாகியிருந்தது. ஆனால் பீஸ்ட் படத்திற்காக சமீபத்தில் விஜய் சன்டிவிக்கு பேட்டி கொடுக்கும்போது தந்தைதான் குடும்பத்தின் ஆணி வேறு என அப்பாவை பற்றி புகழ்ந்து பேசினார்.

இதனால் இவர்களுக்குள் பிரச்சனை தற்போது சுமூகமாக முடிந்து உள்ளது என ரசிகர்கள் நினைத்திருந்தனர். ஆனால் தற்போது எஸ்ஏசி எஉருக்கமாக கண்கலங்கி பேசி வீடியோ வெளியிட்டிருந்தார். அதாவது மாதத்தில் ஒரு முறையாவது விஜய் அவரது பெற்றோரை சந்திக்க வேண்டும். மேலும் தங்களுக்காக அரை மணி நேரமாவது ஒதுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

இதைப் பார்த்த பலரும் வெளியுலகத்திற்காக தான் விஜய் அப்பாவை பற்றி புகழ்ந்து பேசுகிறார், இன்னும் அவரை ஒதுக்கி தான் வைத்துள்ளார் என விமர்சித்து வருகின்றனர். மேலும் தன்னுடைய படங்களில் குடும்ப சென்டிமென்ட் பார்க்கும் விஜய் அவருடைய பெற்றோரை ஏற்றுக் கொள்ளலாம் எனவும் அவரது ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

Next Story

- Advertisement -