fbpx
Connect with us

தோல்வியிலும் விஜய்க்கு ஆதரவு தந்த பிரபல நடிகர் – S.A.சந்திரசேகர் கூறிய ரகசியம்

தோல்வியிலும் விஜய்க்கு ஆதரவு தந்த பிரபல நடிகர் – S.A.சந்திரசேகர் கூறிய ரகசியம்

vijay-sa-chandrasekharவிஜய் நடித்த புலி படத்தை தயாரித்த P.T.செல்வகுமார் தற்போது ஜீவா, சிபிராஜ், ஹன்ஷிகா நடிப்பில் போக்கிரிராஜா படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தின் விழாவில் கலந்துகொண்ட விஜய்யின் தந்தை S.A.சந்திரசேகர் கூறும்போது, இப்படத்தின் தயாரிப்பாளர் செல்வகுமாரின் ஒவ்வொரு முன்னேற்றத்தையும் கவனித்து வருகின்றேன். நானும் விஜய்யும் வளர காரணமாக இருந்தவர். எங்கள் வளர்ச்சியில் அவருக்குப் பெரும்பங்கு உண்டு.

புலி படத்தின்போது எங்களுக்கு சிரமம் வந்தது. வெற்றி வரும்போது எல்லாரும் வருவார்கள். துவண்டு இருக்கும்போது தூக்கிவிடுபவன் கடவுளுக்கு ஒப்பானவன். நாங்கள் துவண்டு இருந்தபோது எங்களுக்கு ஆதரவாக இருந்தவர் நடிகர் ஜீவாதான். ஜீவாவின் நல்ல மனதுக்கு இந்தப்படம் நல்ல வெற்றியைப் பெற வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top