சூர்யா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் சிங்கம் 3 படம் திரைக்கு வரவுள்ளது. அனைத்து பாடல்களும் வரும் ஞாயிற்றுகிழமை வெளிவரும் என தெரிகிறது.

ஏற்கனவே டீசெர் வந்து 7.3 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். சிங்கம் 3 படத்தின் தமிழ்நாட்டு வெளியீட்டு உரிமை 42.5 கோடி அளவிற்கு விற்கப்பட்டுள்ளதாக சொல்கின்றனர். சூர்யாவின் அனைத்து திரைப்படங்களை விட இதுதான் அதிகம் என கூறுகின்றனர்.

இயக்குனர் ஹரி பிரமாண்டமான இயக்கத்தில் உருவாகிவரும் சிங்கம் 3 படத்தில் ஸ்ருதிஹாசன், அனுஷ்கா ஆகியோர் நடிக்கின்றனர். தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் சிங்கம் 3 வெளிவருகிறது. பாடல் டீசர் வீடியோ கீழே உள்ளது.