ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் ‘S3’ படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் விசாகப்பட்டினத்தில் தொடங்கவுள்ளது. இதைதொடர்ந்து மலேசியா உள்ளிட்ட இடங்களிலும் இதன் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இப்படம் ஆயுத பூஜை விடுமுறையை மனதில்கொண்டு வரும் அக்டோபர் 7-ம் தேதி திரைக்குவரும் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. சூர்யா ஜோடியாக அனுஷ்கா நடிக்கும் இப்படத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.