Tamil Cinema News | சினிமா செய்திகள்
செல்வராகவன்- தனுஷ் இணையும் பட தலைப்பு, மெர்சலான இரண்டு போஸ்டர்கள் வெளியானது
கோலிவுட்டில் மோஸ்ட் வான்டட் இயக்குனர் மற்றும் ஹீரோ தான் செல்வராகவன் மற்றும் தனுஷ். இந்த அண்ணன் தம்பி காம்போ எப்பொழுது இணைவார்கள் என கோலிவுட்டே ஏங்கி காத்திருப்பர். புதுப்பேட்டை 2 ஸ்க்ரிப்டில் செல்வா உழைக்க ஆரம்பித்ததும் அனைவரும் கொண்டாடினார்.
ஆனால் ரசிகர்களுக்கு வேற லெவல் அதிர்ச்சி கொடுத்தார் செல்வா. இரண்டு படங்களில் இணைவது பற்றிய அறிவிப்பு வெளியானது. ஆயிரத்தில் ஒருவன் 2, 2024 இல் ரிலீசாகும், தனுஷ் இதில் நடிக்கிறார் என்ற அறிவிப்பு போஸ்டருடன் வெளியானது. அதுமட்டுமன்றி செல்வராகவனின் 12வது படத்தின் ஷூட்டிங் அப்டேட்டும் வந்தது. படமும் ஷூட்டிங் துவங்கி விட்டது.
கலைப்புலி தாணு வி கிரியேசன்ஸ் சார்பில் தயாரிக்கிறார். அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். தனுஷ் – செல்வராகவன் – யுவன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் தலைப்பை இன்று மாலை 7.10 மணிக்கு வெளியிட்டனர்.
இப்படத்திற்கு நானே வருவேன் என தலைப்பு வைத்துள்ளனர்.

dhanush in s 12 nane varuven
இந்த போஸ்டர் படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரிக்க வைத்துள்ளது.

dhanush in s 12 nane varuven
