Entertainment | பொழுதுபோக்கு
அரசியலில் தான் எஸ்.வி.சேகர் அப்படி இப்படி.. ஆனால் நடிப்பில் சூப்பர்.. இந்த 6 படத்தை மிஸ் பண்ணிடாதீங்க
சமூக வலைத்தளங்களில் சர்ச்சையான பதிவுகளை வெளியிட்டு பிரச்சனையை கிளப்பி விடுபவராக தான் நமக்குத் தெரியும் எஸ் வி சேகர். ஆனால் எஸ் வி சேகர் ஒரு நடிகனாக வெற்றிகண்ட படங்கள் நிறைய உள்ளது. அதில் முக்கியமான சில படங்களின் வரிசையில் தற்போது பார்க்கலாம். நடிப்பை தாண்டி அரசியலில் உள்ள மோகத்தினால் அதிமுக சார்பில் மயிலாப்பூரில் MLA-வாக தேர்வு செய்யப்பட்டார். தற்போது பிஜேபிக்கு சீடனாக வேலை பார்த்து வருகிறார்.
தமிழ்நாட்டில்அரசியலில் விருப்பு வெறுப்புகள் இருந்தாலும், ஒரு நடிகனாக ஒரு கலைஞனாக தன்னை நிரூபித்துக் காட்டியவர் எஸ் வி சேகர்.
குடும்பம் ஒரு கதம்பம்: முத்துராமன் இயக்கத்தில் 1981-ல் எஸ் வி சேகர், சுகாசினி, பிரதாப் போத்தன்,விசு போன்ற பிரபலங்கள் நடிப்பில் வெளிவந்த படம் குடும்பம் ஒரு கதம்பம். நடுத்தர குடும்பத்தில் நடக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து இந்தப் படம் வெற்றிகண்ட படமாகப் பார்க்கப்படுகிறது. கூட்டுக் குடும்பத்தின் வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகள், சந்தோஷங்கள் அனைத்தையும் தற்போது உள்ள தலைமுறைகளுக்கு எடுத்துக்காட்டாக இந்த படம் அமைந்திருக்கும். இந்த படத்தில் விசுவின் நடிப்பு மிக பிரமாதமாக பேசப்பட்டது, எஸ் வி சேகரின் சினிமா வாழ்க்கையை புரட்டிப் போட்ட படம் என்று தான் கூறுவார்கள்.
முழு படம் பார்க்க: YouTube
மணல்கயிறு: விசு இயக்கத்தில் எஸ் வி சேகர், மனோரமா, விசு, சாந்தி கிருஷ்ணா போன்ற பிரபலங்கள் நடிப்பில் 1982-ல் வெளிவந்த படம் மணல் கயிறு. காமெடி மற்றும் டிராமா கலந்த இந்த படம் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் வெற்றியை வைத்து கன்னடம், தெலுங்கு, மலையாளம் என்று அனைத்து மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. எம் எஸ் விஸ்வநாதன் இசை அமைத்திருப்பார், அனைத்து பாடல்களுமே நல்ல வரவேற்பு பெற்றது.
முழு படம் பார்க்க: YouTube
ஊருக்கு உபதேசம்: மீண்டும் முத்துராமன் இயக்கத்தில் விசுவின் திரைக்கதையில் விசு, எஸ் வி சேகர், ஊர்வசி, டெல்லி கணேஷ், ஷாருகாசன் போன்ற பிரபலங்கள் 1984-இல் வெளிவந்த படம் ஊருக்கு உபதேசம். இந்த படம் சிரித்துக்கொண்டே அழுகிறோம் என்றே மேடை நாடகத்தில் உள்ள கதையை படமாக எடுத்து இருப்பார்கள். மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்ற படமாக பார்க்கப்படுகிறது. விசுவின் தந்திரமான கதைக்களம் யாரும் யூகிக்க முடியாத குடும்ப கதாபாத்திரம் என்று அனைத்திலும் வெற்றி கண்டு வெற்றி கண்டது.
முழு படம் பார்க்க: YouTube
சிதம்பர ரகசியம்: விசு இயக்கத்தில் எஸ் வி சேகர், விசு, டெல்லி கணேஷ், அருண்பாண்டியன், இளவரசி, மனோரமா போன்ற பிரபலங்கள் நடிப்பில் 1985-இல் வெளிவந்த படம் சிதம்பர ரகசியம். மக்கள் மத்தியில் காமெடி திரில்லராக நல்ல வரவேற்பைப் பெற்ற படமாக பார்க்கப்படுகிறது. விசு இந்த படத்தில் துப்பறியும் அதிகாரியாக நடித்திருப்பார், அதுமட்டுமில்லாமல் எஸ் வி சேகர் எதார்த்தமான கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல கைதட்டல்களை வாங்கினார். கிட்டத்தட்ட சொல்லப்போனால் எஸ் வி சேகர்,விசுவுடன் சேர்ந்து கூட்டணியில் அனைத்து படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.
முழு படம் பார்க்க: YouTube
கதாநாயகன்: முக்தா சீனிவாசன் இயக்கத்தில் பாண்டியராஜன், எஸ் வி சேகர், ரேகா, மனோரமா போன்ற பிரபலங்கள் நடிப்பில் வெளிவந்த படம் கதாநாயகன். காமெடி கலந்த இந்த படம் மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றிபெற்ற படமாகப் பார்க்கப்பட்டது. இந்தப் படம் மலையாளத்தில் ரீமேக் செய்யப்பட்ட படம், கிட்டத்தட்ட 100 நாட்களை தாண்டி திரையிடப்பட்டது.
முழு படம் பார்க்க: YouTube
சகாதேவன் மகாதேவன்: ராமநாராயணனின் இயக்கத்தில் மோகன், எஸ் வி சேகர் போன்ற பிரபலங்கள் நடிப்பில் 1988 வெளிவந்த படம் சகாதேவன் மகாதேவன். முழுக்க முழுக்க காமெடி நிறைந்த இந்த படம் எஸ் வி சேகர்க்கு நல்ல பெயரையும், புகழையும் வாங்கிக் கொடுத்தது. இவர்களுடன் முக்கியமான கதாபாத்திரத்தில் எஸ் எஸ் சந்திரன் மற்றும் கோவை சரளா அற்புதமாக நடித்திருப்பார்கள். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த படம் கிட்டத்தட்ட 125 நாட்களையும் தாண்டி திரையிடப்பட்டது.
முழு படம் பார்க்க: YouTube
