Tamil Cinema News | சினிமா செய்திகள்
பாடலை கேட்டு முடித்த பின், என்னை கட்டிப்பிடித்து கண் கலங்கினார் என் அம்மா – எஸ். தமன்

S THAMAN
ஷங்கரின் பாய்ஸ் படத்தின் வாயிலாக நடிகரானார். எனினும் அதன் பின் இசைத்துறையில் தன் கவனத்தை செலுத்த தொடங்கினார். மனிதர் தமிழில் அந்தளவுக்கு ஹிட் கொடுக்கவில்லை என்றாலும், தன் தாய் மொழி தெலுங்கில் 50 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். கீரவாணி, மணிசர்மா போன்றவர்களிடம் கி -போர்டு வசிப்பவராக பணிபுரிந்துள்ளார்.
அரவிந்த் சம்மேதா
படத்தை த்ரி விக்ரம் இயக்குகிறார். ஜூனியர் என்.டி.ஆர் ஹீரோ. பூஜா ஹெகிடே ஹீரோயினாக நடிக்கிறார். சமீபத்தில் தமன் இசையமைப்பில் “பெண்வெட்டி” என்ற பாடல் லிரிக் வீடியோ வெளியாகி வைரல் ஹிட் ஆனது.
இப்பாடலை கேட்ட பின் அவரின் அம்மா அவரை கட்டிபிடித்ததாகவும், சட்டை ஈரமாக மாறுவதை உணர்த்த பின் தான், தன் தாய் ஆனந்த கண்ணீர் வடிக்கிறார் என்பதை உணர்ந்ததாக தெரிவித்துள்ளார். உலகிலேயே தாயின் அன்பு தான் மிக உயர்ந்தது என்றும் அந்த ஸ்டாட்ஸ்சில் அவர் பதிவிட்டுள்ளார்.
ராயலசீமா மொழிவழக்கில் இப்பாடல் எழுதப்பட்டுள்ளது. ராமஜோகய சாஸ்திரி பாடலை எழுதியுள்ளார். பிரபல இசையமைப்பாளர் கீரவாணியின் மகன் கால பைரவா பாடியுள்ளார். தமன் அழகாக கோர்வையாக பல இசை வாத்தியங்களை பயன்படுத்தியதே பாடல் ஹிட் ஆனதுக்கு காரணாம்.
தன் குழந்தையுடன் கணவருக்காக காத்துக்கொண்டிருக்கும் பெண்ணின் வலியை இப்பாடல் சொல்கிறது.
