பிரச்சனை செய்த எஸ்எஸ் ராஜேந்திரன்.. கலைஞருக்கு துணாய்நின்று கைகொடுத்த சிவாஜியின் பெருந்தன்மை

தமிழக அரசியல் வரலாற்றில் தவிர்க்கமுடியாத ஒரு நபராக இருப்பவர் கலைஞர் கருணாநிதி. அவர் அரசியலில் மட்டுமல்லாமல் சினிமாவிலும் தன்னுடைய அதிரடியான வசனங்கள் மூலம் பல திரைக்கதைகளை படைத்தவர்.

அவருடைய கதை, வசனத்தில் வெளியான மந்திரிகுமாரி, பராசக்தி, பூம்புகார், மனோகரா போன்ற திரைப்படங்கள் அனைத்தும் நம்மை கவர்ந்துள்ளது. அதிலும் கருணாநிதி, சிவாஜி கூட்டணியில் வெளியான அனைத்து திரைப்படங்களின் வசனங்களும் பட்டையை கிளப்பும்.

அந்த வரிசையில் அனைவரையும் கவர்ந்த ஒரு திரைப்படம் தான் குறவஞ்சி. 1960ஆம் ஆண்டில் வெளிவந்த இந்தத் திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சாவித்திரி இணைந்து நடித்திருந்தனர். அதில் சிவாஜி நடித்த அந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் எஸ் எஸ் ராஜேந்திரன் அவர்கள் தான்.

அவர் கலைஞரின் திரைக்கதையில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். ஆனால் அந்த காலகட்டத்தின் போது ராஜேந்திரன் மற்றும் கலைஞர் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பேசிக் கொள்ளாமல் இருந்தனர்.

இதனால் குறவஞ்சி படத்தில் நடிக்கும் வாய்ப்பு சிவாஜிக்கு சென்றது. இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் அந்த சமயத்தில் சிவாஜிக்கும் கலைஞருக்கும் கூட கருத்து வேறுபாடு இருந்தது. ஆனால் அதையும் தாண்டி கலைஞர், சிவாஜியின் நெருங்கிய நண்பர்.

இதனால் தங்களுக்குள் இருந்த கருத்து வேறுபாடுகளை எல்லாம் மறந்துவிட்டு சிவாஜி அந்த கேரக்டரில் நடிக்க ஒத்துக் கொண்டார். இவர்கள் இருவரின் கூட்டணியில் அதுவரை வெளியான திரைப்படங்களைப் போலவே இந்த குறவஞ்சி திரைப்படமும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து வெற்றி பெற்றது.

ஒருவகையில் கலைஞரின் அற்புதமான வசனங்களுக்கு உயிர் கொடுத்த பெருமை சிவாஜிக்கு உண்டு. இதுதான் அவர்கள் இருவர் கூட்டணியின் வெற்றிக்கு காரணமாகவும் அமைந்தது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்