Tamil Cinema News | சினிமா செய்திகள்
தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் ராஜமௌலியின் மகன். லைக்ஸ் குவிக்குது பட தலைப்பு மற்றும் கான்சப்ட் லுக் போஸ்டர்.
‘பாகுபலி’ படப்புகழ் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் மகன் எஸ்.எஸ்.கார்த்திகேயா தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ள தகவல் டோலிவுட்டில் வெளியாகியுள்ளது. எஸ்.எஸ்.கார்த்திகேயா புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் புதிய நிறுவனம் தொடங்கியுள்ளார். மேலும் இதுவரை பாடகராக மட்டும் இருந்து வந்த இசையமைப்பாளர் மரகதமணி கீரவாணியின் மகன் கால பைரவா இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

Kaala Bairava & MM-Keeravani
தெலுங்கில் ரெடியாகும் இப்படத்திற்கு ‘ஆகாஷவாணி’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ளது. இப்படத்தை ராஜமௌலியின் அசிஸ்டன்ட் அஸ்வின் கங்காராஜு இயக்குகிறார். இப்படத்தின் கான்சப்ட் போஸ்டரை ராஜமௌலி தன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

aakashavani flp
போஸ்டரை பார்க்கும் பொழுது, இது பீரியட் டிராமா படம் போல உள்ளது. மேலும் வேற்றுகிரக ஜீவராசி அல்லது விண்வெளி சம்மந்தப்பட்ட சயன்ஸ் பிக்ஷன் ஜானர் போல உள்ளது.
Who’d be the happiest person now!? ?
When your father releases your concept poster! Thank you baba! ? https://t.co/fUi3YOjLph— S S Karthikeya (@ssk1122) November 21, 2018
தன் மகன், உறவினர், அசிஸ்டன்ட் என இந்த ப்ரொஜெக்ட் ராஜமௌலியின் மனதுக்கு மிகவும் நெருக்கமான ஒன்று என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
