fbpx
Connect with us

ராஜமௌலியின் 400 கோடி பிரமாண்ட படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. பெரும் சோகத்தில் ரசிகர்கள்!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ராஜமௌலியின் 400 கோடி பிரமாண்ட படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. பெரும் சோகத்தில் ரசிகர்கள்!

இந்திய திரையுலகமே மொத்தமாக ஒன்றுகூடி எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பது எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் RRR என்ற படத்தை தான்.

இதுவரை இல்லாத அளவுக்கு பிரமாண்ட பட்ஜெட்டில் சுமார் 350 முதல் 400 கோடி செலவு செய்து உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஹீரோவாக தெலுங்கு முன்னணி நடிகர்கள் இருவர் நடிக்கின்றனர்.

அதில் ஒருவர் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோராவர். இவர்கள் இருவருக்குமே தெலுங்கு சினிமா மட்டுமின்றி மற்ற மொழிகளிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது.

அதுமட்டுமில்லாமல் ராஜமவுலி படங்களுக்கு என்றே ஒரு மவுசு இருக்கிறது. பாகுபலி இரண்டு பாகங்களைக் செலவிட்ட பணத்தை ஒரே படத்தில் செலவிட்டு படத்தை தீயாக உருவாக்கி வருகின்றனர்.

ராம் சரணின் கதாபாத்திரம் கொண்ட டீசர், படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் ஆகியவை படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ராஜமௌலி RRR படத்தின் ரிலீஸ் தேதியை ஜனவரி 8ம் தேதி 2021 என முதலில் முடிவு செய்திருந்தனர். ஆனால் படப்பிடிப்பு நடத்த முடியாத சூழ்நிலை நிலவியுள்ளதால் ரிலீஸ் தேதியை மாற்றி விட்டனர்.

2021 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் RRR படம் வெளியாக இருப்பதாக தற்போதைக்கு தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.

Continue Reading
To Top