Tamil Cinema News | சினிமா செய்திகள்
400 கோடி பட்ஜெட் படத்துக்கு நாமம் போட்ட பிரபல நடிகை.. சிக்கலில் சிக்கித்தவிக்கும் ராஜமௌலி
தெலுங்கு சினிமாவில் டாப் இயக்குனராக இருந்த ராஜமௌலி(S. S. Rajamouli), பாகுபலி படங்களுக்கு பிறகு உலகமே கொண்டாடும் இயக்குனர்களில் ஒருவராக மாறிவிட்டார். ராஜமௌலியின் அடுத்த RRR படத்துக்குத்தான் அனைவரும் வெயிட்டிங்.
சுமார் 400 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாராகி வரும் RRR படத்தில் தெலுங்கு முன்னணி நடிகர்களான ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் ஆகிய இருவரும் இணைந்து நடித்து வருகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் வில்லனாகவும் நடித்து வருகிறார். பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்தது.
ஆனால் தற்போது ஆலியா பட்டால் 400 கோடி பட்ஜெட் படத்துக்கு ஆப்பு விழுந்துவிட்டதாக கவலையில் இருக்கிறது படக்குழு. சமீபத்தில் நாட்டையே உலுக்கிய சம்பவம் என்றால் அது இளம் நடிகர்கள் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை தான்.
ஒரு பேட்டி ஒன்றில் ஆலியா பட்(Alia Bhatt) சுஷாந்த் சிங் பற்றிய ஒரு கேள்விக்கு கூறிய பதில்தான் தற்போது வினையாக வந்து முடிந்துள்ளது. அந்த நிகழ்ச்சியில் சுஷாந்த் சிங்கை திருமணம் செய்ய விரும்புகிறீர்களா அல்லது கொலை செய்ய விரும்புகிறீர்களா என கேட்டுள்ளார்.
அதற்கு ஆலியா பட், சுஷாந்த் சிங்கை கொல்ல ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார். இந்த பதில்தான் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதனால் ஆலியா பட் படங்களுக்கு பெரிய பிரச்சினைகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.
இதற்கிடையில் ராஜமவுலியின் படத்திற்கும் பிரச்சனை ஏற்படலாம் என படக்குழுவினர் ஆலியா பட்டை நீக்கி விடலாம் என தெரிவித்து வருகிறார்களாம். என்ன செய்வது என்று புரியாமல் புலம்பிக் கொண்டிருக்கிறாராம் ராஜமௌலி.
