Sports | விளையாட்டு
இந்தியா யூ-19 அணியில் இடம் பிடித்தார் அர்ஜுன் டெண்டுல்கர்!
சச்சின் டெண்டுல்கர்
உலக கிரிக்கெட்டில் மிகவும் மதிக்கப்பட்ட பெயர். அவதும் பேட்டிங் போஸ் தொடங்கி, பேட் காட்டும் ஸ்டைல், ரன் ஓடுவது என்று அவர் செய்த அணைத்து விஷயங்களுமே சென்சேஷன் தான். அவரின் மகன் என்பதே அர்ஜுன் டெண்டுல்கருக்கு வேறு விதமான அழுத்தத்தை கொடுக்கும். அவர் உச்சம் அடையும் வழி செய்யும், அதே சமயத்தில் அவரை அதல பாதாளத்தில் கொண்டு சேர்த்துவிடும்.
19 வயதுக்கு உட்பட்டோர் அணி அடுத்த மாதம் இலங்கை செல்கிறது. அங்கு ஒருநாள் தொடர் மற்றும் நான்கு நாட்கள் (டெஸ்ட் ஸ்டைலில் வடிவில்) நடக்கும் போட்டிகளில் ஆட உள்ளன. இதில் தான் அர்ஜுன் டெண்டுல்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். எனினும் ஒரு நாள் போட்டிக்கான அணியில் இவர் இடம் பெறவில்லை.
அர்ஜுன் டெண்டுல்கர்
இடது கை வேகப்பந்து வீச்சாளர் மற்றும் மத்திய வரிசையில் பேட்டிங் ஆடும் ஆல் – ரௌண்டார் அர்ஜுன். கடந்த செப்டெம்பரில் தான் 18 வயதை கடந்தார். சில வருடங்களாகவே இங்கிலாந்தில் பயிற்சயில் ஈடுப்பட்டு வந்தார்.
சென்ற வருடம் கோச் பீஹார் ட்ரோபியில் மும்பை யூ 19 அணிக்காக ஆடினார். 12 விக்கெட்டுகள் வீழ்த்தினார். மேலும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான, J Y LELE டௌர்னமெண்டில் இவர் ஆடினார். இதுமட்டுமன்றி ஆஸ்திரேலிய கிளப் கிரிக்கெட்டில் ஹாங் காங் அணிக்கு எதிராக நன்கு விக்கெட் எடுத்ததோடு மட்டுமல்லாது 27 பாலில் 48 ரன் குவித்தார்.
19 வயதுக்கு உட்பட்ட வீரர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. அர்ஜுனும் அதில் பங்கேற்றார். பயிற்சியில் சிறந்த முறையில் செயல்பட்ட காரணத்தினால் நேற்று அறிவிக்கப்பட்ட இலங்கை செல்லவிருக்கும் அணியின் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார்.
அர்ஜுனின் தேர்வு பற்றி சச்சின் பத்திரிகையாளர்களிடம் பேசியது ,” யூ 19 அணியில் அர்ஜுன் தேர்வானது எங்களுக்கு மகிழிச்சியாக உள்ளது. அவர் கிரிக்கெட் வாழ்க்கையில் முக்கியமான மயில் கல். நானும், அஞ்சலியும் அவருக்கு சப்போர்ட்டாக இருப்போம். கடவுளையும் பிராத்திப்போம்.”
சினிமாபேட்டை கொசுறு நியூஸ்
எனினும் அடுத்த யூ 19 உலகக்கோப்பை 2020 இல் தான். அந்தசமயம் அவர் 20 வயது 5 மாதங்களை கடந்துவிடுவார். எனவே இவர் ஜூனியர் உலகக்கோப்பை விளையாட முடியாது. எனினும் இந்த அனுபவம் இவருக்கு கட்டாயம் கை கொடுக்கும். போகிற போக்கை பார்த்தல் 2019 ஐபில் இல் கட்டாயம் ஆடுவர் என்றே தோன்றுகிறது.
