இளையதளபதி விஜய்யின் தந்தையும் பிரபல இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கேரளாவில் விபத்து ஒன்றில் சிக்கி படுகாயம் அடைந்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஆனால் இந்த செய்தி வதந்தி என்பது உறுதியாகியுள்ளது.

கேரளாவில் நடந்த விபத்து ஒன்றில் எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களுக்கு தலை மற்றும் ஸ்பைனல் கார்ட் பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டுள்ளதாகவும், கோட்டயத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அவருக்கு தீவிர சிகிச்சை நடைபெற்று வருவதாகவும் வதந்தி ஒன்று மிக வேகமாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்த எஸ்.ஏ.சந்திரசேகர் தரப்பு, இது முழுக்க முழுக்க வதந்தி என்றும் விஜய் ரசிகர்கள் உள்பட யாரும் இதை நம்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளனர்.