அவ்ளோ சொல்லியும் கேக்கல.? ரஷ்யாவின் வெறியாட்டம் ஆரம்பம்.. சென்னையில் கிடுகிடுவென உயர்ந்த தங்கத்தின் விலை

சாதாரண பங்காளிச் சண்டையாக ஆரம்பித்த ரஷ்யா மற்றும் உக்ரைன் பிரச்சனை இன்று இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் அளவிற்கு பெரிதாகி இருக்கிறது. சோவியத் யூனியன் ஆக பின்னி பிணைந்து இருந்த இந்த இரண்டு நாடுகள், பல்வேறு காரணங்களால் கால சூழ்நிலைக்கு ஏற்றார்போல் தனித்து செயல்பட வேண்டும் என்ற எண்ணத்துடன் ரஷ்யா தனியாகவும் உக்ரைன் தனியாகவும் பிரிந்தது.

தனியாக பிரிந்ததில் இருந்து உக்ரைன் நாட்டின் மீது ஒரு தனி கவனத்தை செலுத்தி வந்தது ரஷ்ய நாடு. பொருளாதாரத்திலும், ராணுவத்திலும் அமெரிக்காவை அடித்து நொறுக்கும் அளவிற்கு பலம் பொருந்திய நாடாக இருக்கிறது ரஷ்ய நாடு. ஆனால் அப்படிப்பட்ட ரஷ்ய நாட்டினை உக்ரைன் நாட்டின் பொருளாதாரமும் ராணுவமும் எதுவும் செய்ய முடியாது என்று தெரிந்தும் ரஷ்யா உக்ரைன் மீது தொடர்ந்து தனது எதிர்ப்புகளை கனல்களை கக்கிக் கொண்டிருந்தது.

அப்படி உக்ரேன் நேட்டோ நாடுகளின் சபையில் தன்னை இணைத்துக் கொள்வதாக அறிவித்திருந்தது. அப்படி இணைத்துக் கொண்டால் ரஷ்யாவின் சவுடால் செல்லாது என்பதை புரிந்து கொண்ட ரஷ்ய நாடு, உக்ரைன் அப்படி ஒரு முடிவெடுத்தால், கண்டிப்பாக உக்ரைன் மீது போர் தொடுக்கப்படும் என்று பலமுறை ரஷ்யா எச்சரித்தும் இருந்ததது. ஆனால் உக்ரைன் அதற்கு எல்லாம் அஞ்சியது போல தெரியவில்லை. தொடர்ந்து தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து வந்தது.

இதனால் பொருளாதாரத்தடை ராணுவ அடக்கு முறை என்று பல ஆயுதங்களை கையில் எடுத்து உக்ரைன் நாட்டை ரஷ்ய நாடு மிரட்டிப் பார்த்தது . ஆனால் எதற்கும் சளைக்காத உக்ரைன் நாடு தொடர்ந்து ரஷ்ய நாட்டிற்கு சவால் விட்டுக் கொண்டிருந்தது.

இந்த நிலையில்தான் ரஷ்ய நாட்டு எல்லைப் பகுதியிலும் உக்ரைன் நாட்டு எல்லைப் பகுதியிலும் ரஷ்யா தனது இராணுவ பலத்தைக் காட்டுவதற்காக தன்னுடைய ஒட்டுமொத்த ராணுவத்தின் ஒரு பகுதியை அங்கே நிறுத்தி வைத்து உக்ரைன் நாட்டிற்கு கடந்த ஒரு வாரகாலமாக பயம் காட்டி வந்தது. இன்று உலக நாடுகள் பலமுறை எச்சரித்தும் சற்றும் காது கொடுக்காத ரஷ்ய நாடு தற்போது உக்ரைன் மீது போர் தொடுத்து இருக்கிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களின் மீது குண்டு மழை பொழிய இருக்கிறது.

உக்ரைனின் முக்கிய நகரத்தின் மையப் பகுதியில் தற்போது ரஷ்ய ராணுவத்தின் ஆட்டம் ஆரம்பித்திருக்கிறது. இப்படி ரஷ்யாவின் இந்த அராஜகப் போக்கினால் உலக நாடுகள் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியை சந்திக்க இருக்கின்றன. இதனால் பாதிக்கப்படப்போவது ரஷ்யா மட்டுமல்ல. இந்தப் போர் நடப்பதால் உலகத்தின் பல வல்லரசு நாடுகள் நாங்கள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதிப்போம் என்று அறிவித்திருந்தது.

இப்படி இருக்கையில் ரஷ்யா தனது ராணுவத்தை உக்ரைன் நாட்டிற்குள் அனுப்பி போரைத் தொடங்கி வைத்திருக்கிறது. இதனால் ரஷ்யா மீது விழப்போகின்ற பொருளாதாரத்தடை ஒட்டுமொத்த உலகையே ஆட்டிப்படைத்து விடும். பொருளாதாரத்தின் அச்சாணி முறிந்து பொருளாதாரத்தின் சுழற்சி நின்றுவிடும். இந்தியாவில் அதிகமாக மின்சார உற்பத்திக்கு நம்பியிருக்கும் நிலக்கரியை ரஷ்யாவிடம் இருந்து தான் இறக்குமதி செய்கிறோம். பொருளாதார தடை விதிக்கப்பட்டால் இந்தியாவின் மின்சார உற்பத்தியில் மிகப் பெரிய பாதிப்பு ஏற்படும்.

தற்போது போர் ஆரம்பித்த ஒரு மணி நேரத்தில் பங்குச் சந்தையில் ஏற்பட்ட மாற்றத்தால் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து இருக்கிறது கிராமுக்கு 108 ரூபாய் உயர்ந்து தங்கம் சென்னையில் இன்று 4 ஆயிரத்து 827 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது வெறும் ஆரம்பம் தான். தற்போது ரஷ்யா செய்த இந்த தவறினால் ஆசிய கண்டத்தில் உள்ள பல நாடுகள் அவதிக்குள்ளாக இருக்கிறது. இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்