Connect with us
Cinemapettai

Cinemapettai

Sports | விளையாட்டு

தளபதி விஜய்யின் இந்த பன்ச் வசனம் விஜய் ஷங்கருக்கு பொருந்தும். வீடியோ பதிவிட்ட ரசல் அர்னால்ட் .

நேற்றைய போட்டியில் பேட்டிங் , பௌலிங் என இரண்டிலும் அசத்தி விஜய் ஷங்கர் சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறார்.

விஜய் ஷங்கர் VIJAY SHANKAR

மிதவேக பந்துவீச்சாளர் மற்றும் மத்திய வரிசை பாட்ஸ்மான். இந்திய ஏ அணி, ஐபில் மற்றும் ரஞ்சி போட்டிகளில் நன்றாக விளையாடியதன் காரணமாகவே இவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது. நிதாஸ் கோப்பையில் இவர் ஆட்டம் பலரின் எதிற்மறையான விமர்சனத்துக்கு உள்ளானது .

நேற்றைய நாக்பூர் இரண்டாவது போட்டியில் இந்திய அணி மூன்று விக்கெட் இழந்து தடுமாறிய சமயத்தில் அதிரடியாக கேப்டன் கோலியுடன் இணைந்து ஆடினார். 41 பந்தில் 44 ரன்கள் ( ஐந்து தரும் ஒரு 6 அடக்கம்) எடுத்தார். துரதிர்ஷ்ட விதமாக ரன் அவுட் ஆனார்.

பின்னர் பந்துவீச்சில் ஒரு ஓவர் வீசி 13 ரன் கொடுத்தார். இந்நிலையில் 50 வைத்து ஓவர் போடும் வாய்ப்பு இவருக்கு அளிக்கப்பட்டது. 6 பந்து 11 ரன் 2 விக்கட் மீதம் இருந்தது. ஜாதவ் அல்லது ஷங்கர் யார் வீசுவார்கள் என்ற குழப்பம் அனைவருக்கும் இருந்தது.

எனினும் விஜய் ஷங்கருக்கு வாய்ப்பு செல்ல முதல் பாலில் செட் பேட்ஸ்மேன் ஸ்டானிஸ் 52(65) அவர்களை lbw முறையில் அவுட் ஆக்கினார். அதன் பின்னர் அடுத்த பாலில் இரண்டு ரன் கொடுத்தார். பின்னர் ம்மொன்றுவது பாலில் போல்ட் செய்து ஆடம் சம்ப்பா விக்கட்டை வீழ்த்தி இந்தியாவை வெற்றி பெற செய்தார்.

ரசல் அர்னால்ட்

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர். இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். தற்பொழுது கமெண்ட்ரியில் பிஸியாக உலகம் சுற்றி வருபவர்.

இவர் தான் தன் ட்விட்டரில் விஜய்யின் “திருமலை” படத்தின் ‘வாழக்கை ஒரு வட்டம் டா’ இந்த வசன வீடியோவை ஷேர் செய்துள்ளார். இது பல லைக்ஸ் குவித்து வருகின்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top