இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி தற்போது உருவாக்கிவரும் படமாவது படம் இதற்குமுன் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி, ஒரு வழியாக படப்பிடிப்பின் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த படத்தில் ரன்வீர் சிங் அலாவுதீன் கில்ஜியாக நடிக்கிறார். தற்போது கிளைமாக்ஸ் ஷூட்டிங் நடந்துவரும் நிலையில் ரன்வீர் சிங்கிற்கு தலையில் பலமாக அடிபட்டு ரத்தம் கொட்டியுள்ளது. ஆனால் அது கூட தெரியாமல் தொடர்ந்து நடித்துள்ளார். டேக் முடிந்து கட் சொன்ன பிறகு தான் அவருக்கு அடிபட்டது தெரிந்துள்ளது.

முதலுதவி செய்துவிட்டு அவரை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். தலையில் தையல் போட்ட பிறகு கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கு வந்துவிட்டாராம்.

அன்று மீதமிருந்த ஷூட்டிங்கை முடித்துகொடுத்துவிட்டு தான் கிளம்பி சென்றாராம்.