fbpx
Connect with us

Cinemapettai

200 நாள் ஓடிய ரன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த மாஸ் ஹீரோ தான்.!

run

News | செய்திகள்

200 நாள் ஓடிய ரன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த மாஸ் ஹீரோ தான்.!

தளபதி விஜய் என்றாலே அனைத்து ரசிகர்களுக்கும் பிடிக்கும் அவரின் படம் வருகிறது என்றால் பல ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான் ஆனால் இந்த இடத்தை அடைவதற்கு விஜய் மிகவும் கஷ்ட்டபட்டார்.

vijay

தற்பொழுது விஜய் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் 62 படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார் மேலும் பல சினிமா நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.

தளபதி விஜய் ஆரம்பத்தில் இந்த இடத்தை அடைவதற்கு மிகவும் கடினபட்டார் அந்த சமையத்தில் பல ஹிட் படத்தை தவறவிட்டுள்ளார், அதில் ஓன்று ரன் படம், ரன் படத்தை லிங்குசாமி தான் இயக்கினார் இந்த படத்தில் மாதவன், மீரா ஜாஸ்மின், விவேக்,ரகுவரன் என பல நடிகர்கள் நடித்திருந்தார்கள் தமிழில் மீரா ஜாஸ்மினுக்கு முதல் படமாகும்.

இயக்குனர் லிங்கு சாமி இந்த படத்தின் கதையை முதலில் விஜய்க்குதான் எழுதினாராம் ஆனால், இந்த படத்தில் நடிக்க விஜய்யிடம் பேச்சு வார்த்தையும் நடந்ததாம்,ஆனால் விஜய்க்கு மற்ற படத்தின் கால்சீட் காரணமாக இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது அதனால் கதையில் கொஞ்சம் மாற்றம் செய்து மாதவனை நடிக்க வைத்தார்களாம்.

இந்த படத்தில் நடித்த மாதவன்,மீரா ஜாஸ்மின் விவேக் ஆகியோருக்கு விருது கிடைத்தது ,மேலும் இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று கிட்டதிட்ட 200 நாட்கள் ஓடியது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top