பல கதைகளைத் தொகுத்து அதனை ஒரே படமாக வழங்குவதே ‘ஆந்தாலஜி’ என்ற ஜானர். இந்த ஸ்டைலில் 6 பேய் கதைகளை இணைத்து எடுக்கப்பட்டுள்ள படம் தான் இந்த 6 அத்தியாயம்.

6 ATHIYAYAM

இந்தப் படத்துக்குள்ள ஆறு படங்கள். ஒவ்வொன்றையும் தனி தனி டீமாக சேர்ந்து எடுத்துள்ளார்கள். 6 கதைகளின் தலைப்பு மற்றும் அதன் இயக்குனர்கள் . மிசை – அஜயன் பாலா, சூப் பாய் சுப்ரமணி – லோகேஷ், சித்திரம் கொல்லுதடி – ஶ்ரீதர் வெங்கடேசன், அனாமிகா – சுரேஷ், சூப்பர் ஹீரோ – கேபிள் சங்கர், இனி தொடரும் – சங்கர் தியாகராஜன்.

இப்படத்தின் ப்ரோமோ பாடலுக்கு விக்ரம் வேதா புகழ் சாம் இசைஅமைத்துள்ளார். இப்பாடலை இன்று விஜய் ஆன்டனி வெளியிட்டார்.