Trisha-Hospital

நடிகைகளுக்கு ஒரு பிரச்சனை என்றால் அது ரசிகர்களால் தாங்கிக் கொள்ளவே முடியாது. ஏனெனில் அவர்களை தன் வீட்டில் ஒருவராக பார்க்கிறார்கள் ரசிகர்கள்.

இந்நிலையில் நடிகை திரிஷா சதுரங்க வேட்டை 2, பாலிவுட் படமான NH10 ரீமேக் என பிஸியாக அடுத்தடுத்து கமிட்டாகி இருக்கிறார்.

இந்நிலையில் நடிகை திரிஷா உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக நேற்று சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. தற்போது இந்த தகவலை மறுத்துள்ளார் திரிஷாவின் தாயார்.

இதுகுறித்து உமா கிருஷ்ணன் கூறுகையில், மலேஷியாவில் நடக்கும் சதுரங்க வேட்டை 2 படப்பிடிப்பில் அரவிந்த் சாமியுடன் திரிஷா நடித்து வருகிறார். அவர் மருத்துவமனையில் இருப்பதாக வந்த தகவல்கள் அனைத்தும் வதந்தியே என கூறியுள்ளார்.