fbpx
Connect with us

கமலின் நம்மவர் ஸ்டைலில் ரெடி ஆகிறதா தளபதி 64 ? கோலிவுட் கிசு கிசு

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கமலின் நம்மவர் ஸ்டைலில் ரெடி ஆகிறதா தளபதி 64 ? கோலிவுட் கிசு கிசு

பிகில் ட்ரைலருக்காக கோடம்பாக்கம் வைட்டிங், ஆனால் மறுபுறம் ஆர்ப்பாட்டம் இல்லாமல் தளபதி 64 பூஜையுடன், ஷூட்டிங்கும் துவங்கி விட்டது. மாநகரம், கைதி படங்களின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். சமீபத்தில் கூட இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த போட்டோ, வீடியோ இணையத்தில் பரவியது.

இந்நிலையில் இப்படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியர் ரோலில் நடிப்பதாக தகவல்கள் கசிந்து வருகிறது. படக்குழு காலேஜ் ஒன்றின் பேக் ட்ராப்பில் ஷூட்டிங் நடத்த இடம் தேடியதின் காரணமாகவே இந்த விஷயம் வெளி ஆட்களுக்கு தெரிந்தது என்கின்றனர் விஷயம் அறிந்தவரக்ள். சாந்தனு, முகேன் ராவ், ஆண்டனி வர்கீஸ் இவரின் ஸ்டுடென்ட் ரோலில் நடிக்கக்கூடுமாம். ஆக்ஷன் பிளாக் நிறைந்த பிளாஷ் பேக் பகுதிகளும் உண்டு என்கின்றனர்.

நம் தமிழ் சினிமாவில் …காலேஜ் துணை முதல்வராக, வரலாறு பேராசிரியராக நம்மவர் படத்தில் கமல் கலக்கி இருப்பார். மாணவர்களை திருத்தும் முயற்ச்சியில் வெற்றியும் பெறுவார்.

மெர்சல், சர்கார், பிகில் என ஒவ்வொரு படத்தில் ஒவ்வொரு தரப்பின் நெஞ்சில் நுழைந்துள்ளார் விஜய். இந்த செய்து மட்டும் உண்மையாகும் பட்சத்தில், மாணவர்களின் ஒட்டுமொத்த ஆதரவும் தளபதிக்கு தான்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top