Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema KisuKisu
மாஸ்டர் விஜய் கதாபாத்திரத்தில் இப்படி ஒரு ட்விஸ்ட் வைத்துள்ளாரா இயக்குனர்! செம்ம ஷாக்கில் ரசிகர்கள்
தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படம் கோடை விடுமுறைக்கு வெளியாக இருந்த நிலையில் கொரானாவின் காரணமாக தள்ளிச் சென்று கொண்டே இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். பாடல்கள், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் என அனைத்துமே இந்திய அளவில் ஹிட்.
OTT தளத்தில் வெளியிடுவார்களோ என பலரும் எதிர் பார்த்த நிலையில், தயாரிப்பு தரப்பு மறுத்து வந்தனர். வெள்ளி திரையில் தான் மாஸ்டர் என முடிவாக இருந்தனர். இந்நிலையில் இன்று சன் டிவி யூ ட்யூப் சானலில் மாலை 6 மணிக்கு டீஸர் வெளியாகும் என்ற அறிவிப்பு வந்துள்ளது.
இந்நேரத்தில் விஜயின் ரோல் பற்றிய தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

vijay-master-cinemapettai
குடிப்பழக்கம் உள்ள பேராசிரியர் வேடம் என்பது முன்பே வெளியான தகவல். இந்நிலையில் கண் பார்வை குறைபாடு கொண்ட கதாபாத்திரம் அவருடையது என்கின்றனர்.
மாஸ்டர் படத்தில் வெளியான பெரும்பாலான போஸ்டர்களில் விஜய் கூலிங் க்ளாஸ் அணிந்தே போட்டோக்கள் வெளியானது. மேலும் முதலில் வெளியான போஸ்டர் சற்றே கலங்கலாக இருந்ததும், இதையே மறைமுகமாக குறிப்பிட்டதாக சொல்கின்றனர் ஒரு சிலர்.
ஏற்கனவே பூந்தமல்லியில் உள்ள கண்பார்வை குறைவற்றவர்கள் படிக்கும் பள்ளியில் ஷூட் நடைபெற்றது . அப்படியெனில் கிட்டத்தட்ட உறுதி ஆகிவிட்டது. இன்று மாலை டீஸர் வெளியாகும் பொழுது உண்மை தெரிந்துவிட தான் போகிறது.

master-vijay-cinemapettai
வீ ஆர் வைட்டிங்!
