உலகெங்கும் தன் குரல் வளத்தால் பல கோடி ரசிகர்களை கொண்டிருப்பவர் பிரிட்னி ஸ்பியர்ஸ். இவர் இன்று விபத்தில் உயிர் இழந்துவிட்டதாக சோனி நிறுவனம் தன் அதிகாரப்பூர்வ டிவிட்டர் தளத்தில் தகவல் ஒன்றை பகிர்ந்திருந்தது.

சோனி நிறுவனமே கூறிவிட்டதால் இதை உண்மை என நினைத்த ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் சோனி டிவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டிருப்பது பின்னர்தான் தெரியவந்தது. இந்த வேலையை Our Mine எனும் ஹேக்கிங் கும்பல்தான் செய்திருக்கும் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.