ருத்ர தாண்டவத்தை தமிழ்நாட்டில் வெளியிட விட மாட்டோம் என்ற ரசிகர்.. எச்.ராஜாவின் வைரல் பதிலடி

பாஜக கட்சியின் தேசிய தலைவர்களில் ஒருவராக இருந்தவர் எச்.ராஜா. அரசியல் சினிமா என ஆதரவு குரல்களையும் கண்டன குரல்களையும் எப்போதும் கொடுத்து வருகிறார்.

டுவிட்டர் பக்கங்களில் எப்போதும் ஆக்டிவ் மோடில் இருக்கும் எச்.ராஜா சில பிரச்சனைகளுக்காக பிரஸ் மீட்டிலும் கலந்து கொண்டு கண்டனக்குரலையும் ஆதரவுக்குரலையும் கொடுப்பது வழக்கமான ஒன்று. நேற்று மாலை 5.06க்கு வெளியான ருத்ர தாண்டவம் படத்தின் டிரைலர் பலராலும் பேசுபொருளாகியுள்ளது.

படத்தின் சாராம்சத்தையும் அடிப்படை கதையையும் எடுத்துரைக்கும் விதமாக அமைக்கப்பட்டிருந்த அந்த டிரைலரில் சாதியம் பற்றியும் பெண்களை அச்சுறுத்தும் போதைவாசிகள் பற்றியும் காட்டப்பட்டிருக்கும். மதத்தை விட சாதிக்கோ இங்கு அதிக முக்கியத்துவம் என்றும் குறிப்பாக மதமாற்ற தடை குறித்தும் பேசப்பட்டிருக்கும்.

இயக்குனர் ஜி.மோகனின் கடந்த ஆண்டு படைப்பான திரௌபதி கலவையான விமர்சனங்களோடு நல்ல வசூலையும் ஈட்டியது. திரௌபதி படத்தில் உண்மையாகவே நடக்கின்ற நாடக காதல்கள் பற்றியும் சாதிய பிளவுகள் குறித்தும் எடுத்துக்காட்டி தோலுரித்திருப்பார்.

இந்த படம் நன்றாக ஓடும் ஓட வேண்டும் என எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதற்கு கீழே ஒரு கமாண்டில் அரவிந்தன் என்கிற நபர் இப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிட விடமாட்டோம் என்று கூறியிருந்தார். அதற்கு பதிலளித்த எச்.ராஜாவோ கண்டிப்பாக வெளியிட வேண்டும் மேலும் வெளியிட வைப்போம் என கூறியிருந்தார்.

h-raja-cinemapettai
h-raja-cinemapettai

தல அஜித்தின் மைத்துனர் ரிச்சர்ட் நடித்திருக்கும் இப்படத்தில் ராதாரவி, கௌதம் வாசு தேவ மேனன் உட்பட இன்னும் சில பிரபலங்கள் நடித்துள்ளனர்.