புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

அதானிக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட்.. ரஷ்யாவின் குற்றச்சாட்டு என்ன?

இந்தியாவின் டாப் பணக்காரர்களில் ஒருவரும், முக்கிய தொழிலதிபருமான அதானி மீது லஞ்சம் மற்றும் மோசடிப் புகார்களை அமெரிக்கா கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் முக்கிய தொழிபதிராக அதானி இருக்கிறார். இவர் துறைமுகம், ஐபிஎல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதலீடு செய்த் வெற்றிகரமான தொழிலதிபராக வலம் வருகிறார். தற்போது 62 வயதாகும் அதானி, உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 17 வது இடத்திலும், இந்தியாவில் முகேஷ் அம்பானிக்கு அடுத்து, 2 வது இடத்தில் உள்ளார்.

அதானி உள்ளிட்ட 7 பேர் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு!

இந்த நிலையில் கெளதம் அதானியும் அவரது உறவினர் சாகர் அதானியும் முன்னாள் சிஇஓ வினீத் ஜெயின் உள்ளிட்ட 7 பேர் மீது அமெரிக்க நாட்டில் உள்ள நியூயார்க் நீதிமன்றத்தில் லஞ்சம் கொடுத்ததாகவும், கடன் பத்திர மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி தனித்தனியாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2020 -2024 ஆண்டுகளில், சோலார் மின்சாரத்தை அதிக விலையில் வாங்கும் வகையில் ஒப்பந்தங்களை பெறவேண்டி, தமிழி நாடு, ஆந்திர, ஜம்மு – காஷ்மீர், சத்தீஸ்கர், ஒடிசா ஆகிய மாநிலங்களில் பணிபுரியும் அரசு அதிகாரிகளுக்கு அதானி குழுமம் ரூ.2,100 கோடி லஞ்சம் கொடுத்ததாகவும், இதை மறைத்து, அமெரிக்க முதலீட்டு நிறுவனங்களிடம் இருந்து முதலீடு பெற்றதாகக் கூறி, நியூயார்க் நகரில் உள்ளா புரூக்ளின் பெடரல் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

ரூ.17 ஆயிரம் கோடிக்கு அதிக லாபம்?

இதையடுத்து, அதானி குழுமத்தின் தலைவருக்கு எதிரான பிடிவாரண்ட் பிறப்பித்து, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக, அதானியின் கிரீன் எனர்ஜி நிறுவனம் முறைகேடாக பெற்றுள்ள இந்த ஒப்பந்தங்களின் மூலம் 20 வருடங்களில் 2 பில்லியன் டாலர்கள் அதாவது, ரூ.17 ஆயிரம் கோடிக்கும் அதிக லாபத்தைப் பெற முடியும் என்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

உலகளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், இந்தியாவை தன் வழிக்கு கொண்டுவரும் நோக்கில் இந்தியாவின் டாப் தொழிலதிபாரன அதானி மீது குற்றம் சுமத்தியிருப்பதாக அமெரிக்கா மீது ரஷ்யா மீடியா தெரிவித்துள்ளது.

அதானிக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ள நிலையில், அதானி நிறுவனத்துடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தை கென்யா நாட்டு அரசு ரத்து செய்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

- Advertisement -

Trending News