தியேட்டர்களில் திருட்டு விசிடி கும்பலை பிடித்து கொடுத்து எப்ஐ.ஆர் பதிவு செய்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு ரூ.1 லட்சம்பரிசு வழங்கப்படும் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.

திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கான தேர்தல் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது. இதில் விஷால் மற்றும் அவரது அணியினர் வெற்றி பெற்றனர். இதற்கான வெற்றி விழாவில் பேசிய விஷால் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு உதவும் வகையில் திருட்டு விசிடியை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறியிருந்தார். இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற விளையாட்டு ஆரம்பம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர் கூறியதாவது:

தியேட்டரில் கேமரா வைத்து படத்தை காப்பி செய்து திருட்டு விசிடி தயாரிக்கும் கும்பலை அல்லது நபரை தியேட்டர் நிர்வாகத்திடம் பிடித்து கொடுத்து எப் ஐ ஆர் பதிவு செய்தால் சம்பந்தப்பட்டவருக்கு தயாரிப்பாளர் சங்கம் சார்பில் 1 லட்சம் பரிசு வழங்கப்படும் இவ்வாறு விஷால் கூறினார். விழாவில் இயக்குனர்கள் பாலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.