Connect with us
Cinemapettai

Cinemapettai

400 கோடியில் பிரமாண்டமாக வந்துள்ள RRR.. வைரலாகும் படப்பிடிப்பு டீசர் வீடியோ

rrr

Videos | வீடியோக்கள்

400 கோடியில் பிரமாண்டமாக வந்துள்ள RRR.. வைரலாகும் படப்பிடிப்பு டீசர் வீடியோ

இந்திய சினிமா உலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு உச்சத்தில் உள்ள இயக்குனர் என்றால் அது ராஜமௌலி தான். பாகுபலி பாகுபலி 2 ஆகிய படங்களின் மூலம் உலகப் புகழ்பெற்றவர்.

பாகுபலி படங்களுக்கு பிறகு தற்போது தனது அடுத்த படத்தின் அறிவிப்பை ராஜமௌலி சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டார். அதில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர்களான ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் ஆகிய இருவரும் இணைந்து RRR என்ற படத்தில் நடித்திருந்தனர்.

பாகுபலி படங்களுக்குப் பிறகு ராஜமௌலி கிட்டத்தட்ட 400 கோடி செலவு செய்து தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களை வைத்து ரத்தம் ரணம் ரௌத்திரம்(RRR) எனும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் வருகின்ற அக்டோபர் 13ஆம் தேதி 2021 ஆம் ஆண்டு வெளியாகப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

ஆனால் தற்போது RRR படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளதாம். இதனால் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களுடைய வருத்தங்களை தெரிவித்து வந்தனர்.

அவர்களை தெம்பூட்டும் வகையில் ராஜமௌலி மற்றும் படக்குழுவினர் சுமார் 400 கோடி பட்ஜெட்டில் RRR படம் எப்படி உருவாகி வருகிறது என்பதை ஒரு வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர்.

முன்னதாக படத்தின் முக்கிய கதாபாத்திரங்களான ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோரின் டீசர்கள் வெளியாகி வைரலானதை தொடர்ந்து இந்த வீடியோவும் இணையத்தை கலக்கி வருகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top