பாகுபலி கட்டப்பா போல் எதிர்பார்க்கப்பட்ட பிரபல நடிகர்.. ஆர்ஆர்ஆர் படத்தில் ராஜமௌலி கொடுத்த ஏமாற்றம்

அதிக எதிர்பார்ப்பை கிளப்பிய ஆர்ஆர்ஆர் படம் மிக பிரம்மாண்டமாக நேற்று வெளியிடப்பட்டது. வெள்ளிக்கிழமை என்பதால் பகல் நேரங்களில் கூட்டம் அந்த அளவிற்கு இல்லை, ஆனால் மாலை மற்றும் இரவு காட்சிகளை பார்ப்பதற்கு ரசிகர்கள் அலைகடலென திரண்டிருந்தனர்.

படத்தில் ராஜமௌலியின் பிரம்மாண்டத்திற்கு குறைச்சலே இல்லை தான். ராம் சரண், ஜூனியர் என்டிஆர் இருவருக்கும் நிகரான கதாபாத்திரத்தை அற்புதமாக செதுக்கி இருந்தார். ஐந்து மொழிகளில் இந்தப் படம் வெளிவருவதால் அந்தந்த மொழியில் சற்று பிரபலமான கதாபாத்திரத்தை பயன்படுத்தியுள்ளார் ராஜமௌலி.

அந்த வகையில் தமிழில் சமுத்திரக்கனியை எதற்கு நடிக்க வைத்தார் என்ற விடை நமக்கு தற்போது தெரிந்துவிட்டது. சமுத்திரகனியின் கதாபாத்திரம் சற்று முக்கியமாக இருந்தாலும் அந்த அளவிற்கு ரசிகர் மனதில் பதியவில்லை என்றுதான் கூறவேண்டும். இன்னும் சமுத்திரகனியை நன்றாக பயன்படுத்தி இருக்கலாமோ என்பதுதான் ரசிகர்களின் வருத்தம்.

இந்த படத்தில் நடிப்பதற்கு தானாகவே முன் வந்த சமுத்திரக்கனியின் பல முயற்சிகளை பார்த்து ராஜமௌலியை மிரண்டு போய் விட்டார். அதுமட்டுமில்லாமல் தனக்கு சம்பளமே வேண்டாம் என்று கூறியது இன்னும் ஆச்சரியத்திற்குரியது. ஆனால் தனக்கென்று ஒரு கவுரவம் இருப்பதை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக 2 கோடி வரை சம்பளம் கொடுத்தார் ராஜமௌலி.

ராம் சரணுக்கு மாமாவாக நடித்திருக்கும் சமுத்திரக்கனியை பாகுபலியில் சத்யராஜ் போல் பலமான கதாபாத்திரம் இருக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. எது எப்படியோ முதல் முறையாக ராஜமௌலியின் படத்தில் நடித்த பெருமை மற்றும் பழமொழி ரசிகர்களிடம் சமுத்திரக்கனி அடையாளம் காண்பிக்கப்பட்டு விட்டார்.

தற்போது மற்ற மொழிகளிலும் வாய்ப்புகள் வந்து கொண்டுதான் இருக்கிறது. இதேபோல் ஆலியா பட், அஜய்தேவ், மார்க்கரெட் டேஸ்பாண்டே போன்ற முக்கியமான புள்ளிகளை மற்ற மொழி மக்களுடன் கனெக்ட் செய்வதற்காக ராஜமௌலி பக்காவாக பிளான் போட்டுள்ளார். இது ஒரு நல்ல பிசினஸ் யுக்தி என்றுதான் கூற வேண்டும்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்