RRR படத்தின் சண்டைக் காட்சி இணையத்தில் லீக்.. கடும் அதிர்ச்சியில் ராஜமவுலி.. 400 கோடியில விழுந்த மண்ணு!

திரையுலகமே மொத்தமாக ஒன்றுகூடி எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பது எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் RRR என்ற படத்தை தான்.

இதுவரை இல்லாத அளவுக்கு பிரமாண்ட பட்ஜெட்டில் சுமார் 350 முதல் 400 கோடி செலவு செய்து உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஹீரோவாக தெலுங்கு முன்னணி நடிகர்கள் இருவர் நடிக்கின்றனர்.

அதில் ஒருவர் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோராவர். இவர்கள் இருவருக்குமே தெலுங்கு சினிமா மட்டுமின்றி மற்ற மொழிகளிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது.

அதுமட்டுமில்லாமல் ராஜமவுலி படங்களுக்கு என்றே ஒரு மவுசு இருக்கிறது. பாகுபலி இரண்டு பாகங்களைக் செலவிட்ட பணத்தை ஒரே படத்தில் செலவிட்டு படத்தை தீயாக உருவாக்கி வருகின்றனர்.

ராம் சரணின் கதாபாத்திரம் கொண்ட டீசர், படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் ஆகியவை படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ஜூனியர் என்டிஆர் காட்டில் புலியுடன் சண்டை போடும் காட்சி ஒன்று RRR படத்தில் உள்ளது. இந்த காட்சி தற்போது இணையதளத்தில் லீக் ஆகிவிட்டது. யூடியூபில் அந்த வீடியோ உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனை அறிந்த ராஜமவுலி RRR படத்தின் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணியில் ஈடுபட்ட அனைவரின் மீதும் கடும் கோபத்தில் உள்ளாராம். அதுமட்டுமில்லாமல் உடனடியாக இணையதளத்தில் அழிப்பதற்கான வேலைகள் நடந்து வருகிறது.