Connect with us
Cinemapettai

Cinemapettai

vijay-rajamouli

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய் பட மொத்த வசூலையும் டிஜிட்டல் உரிமை விற்றதில் வழித்துக்கட்டிய RRR.. அதிர்ச்சி கொடுத்த ராஜமௌலி

தென்னிந்திய சினிமாவில் அதிக வியாபாரம் உள்ள நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தளபதி விஜய். சமீபகாலமாக விஜய்யின் படங்கள் சர்வசாதாரணமாக 200 கோடி வசூலைத் தாண்டியது.

அப்படிப்பட்ட விஜய் பட வசூலை ஒரே ஒரு படத்தின் டிஜிட்டல் உரிமை மட்டும் விற்றதன் மூலம் வழித்து கட்டியுள்ளார் ராஜமவுலி.

பாகுபலி படங்களுக்குப் பிறகு ராஜமௌலி தற்போது தெலுங்கு நடிகர்களான ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகிய இருவரையும் வைத்து RRR என்ற படத்தை இயக்கி வருகிறார்.

RRR-movie-cinemapettai

RRR-movie-cinemapettai

பாதி படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் தற்போது மீதி படப்பிடிப்புகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் படத்தின் டிஜிட்டல் உரிமையை ஹாட்ஸ்டார் மற்றும் ஸ்டார் டிவி உரிமைகள் மொத்தமாக 200 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளார்களாம்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களின் மொத்த வசூலையும் ஒரே ஒரு டிஜிட்டல் உரிமை விற்றதன் மூலம் அனைவரையும் விழிபிதுங்க வைத்துள்ளார் ராஜமவுலி.

பாகுபலி படங்களைப்போல RRR படத்திற்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பாகுபலி அளவுக்கு வசூல் செய்யுமா என்பது சந்தேகம்தான்.

Continue Reading
To Top