பாகுபலி ரேஞ்சுக்கு உருவான ஆர் ஆர் ஆர் திரைப்படம்.. வெளியாகப்போகும் மேக்கிங் வீடியோ

பாகுபலி 1, பாகுபலி 2 படங்களைத் தொடர்ந்து இயக்குனர் ராஜமவுலி இயக்கும் பிரம்மாண்ட திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். பாகுபலி படத்தைப் போலவே இப்படத்திற்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஆர்.ஆர்.ஆர் படம் வெளியாக உள்ளது. படத்தை அடுத்தாண்டு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். எனவே படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஆர்.ஆர்.ஆர் படத்தின் மேக்கிங் வீடியோ ஜூலை 15ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து #RoarOfRRR என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

RRR
RRR

பாகுபலி தொடர்ந்து பாகுபலியை போலவே பிரம்மாண்டமாக தயாராகி வரும் ஆர்.ஆர்.ஆர். படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அதேபோல், இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்