Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

புதிய சர்ச்சை சிக்கலில் RRR! என்ன ராஜமௌலி இப்படி கோட்டை விட்டுடீங்க என புலம்பும் ரசிகர்கள்

இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் அளவிற்கு உச்சத்தில் உள்ள இயக்குனர் ராஜமௌலி . பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்களின் மூலம் உலகப் புகழ்பெற்றுவிட்டார் என்பதே உண்மை.

கற்பனையான உலகத்தை படைத்த அவர் அடுத்தாததாக சரித்திரம் கலந்த போராளிகளின் வாழ்க்கையை படமாகும் பணிகளில் இறங்கினார். தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர்களான ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் ஆகிய இருவரையும் இணைத்தார்.

rrr

rrr

இப்படத்தின் கதைக்களம் இந்திய சுதந்திரத்திற்கு முன்பு நடப்பதாகும் . அல்லூரி சீதாராமராஜூ (ராம்சரண்) மற்றும் கொமாரம் பீம் (ஜூனியர் என்டிஆர் ) என்கிற இரண்டு போராளி வீரர்களின் உண்மை கதையை மையமாக கொண்டே எடுக்கிறர்கள் படத்தை.

ஏற்கனவே ராம் சரணின் பிறந்தநாளை முன்னிட்டு RRR படத்தில் ராம்சரணின் கேரக்டர் குறித்த வீடியோ வெளியானது. சமீபத்தில் பீம் கதாபாத்திரத்தின் வீடியோ வெளியாகி வைரலானது.

ஆனால் இதுமுழுக்க படக்குழுவின் மேக்கிங் காட்சிகள் அல்ல. National Geographic சேனல் காட்சிகளை கிராபிக்சில் உல்ட்டா செய்துள்ளார்கள் படக்குழு என்ற தகவல் வெளியாகி பலரையும் ஆச்சர்ய பட வைத்தது.

jr ntr as bheem in rrr

இந்நிலையில் ட்ரைலர் வந்தவுடன், பீம் குறித்த சில காட்சிகளை நீக்குமாறு ஹிந்துத்வா மற்றும் ஆதிவாசி அமைப்புகள் சொல்கின்றனர். நிசாமின் அரசுக்கு எதிராக போராடியவர் பீம். அவரை கடவுள் போல இன்றும் மக்கள் கும்பிட்டு வருகின்றனர். ஆனால் ஜூனியர் NTR ரோல் முஸ்லீம் கதாபாத்திரம் போல தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.

பீம் அவர்களின் பேரனும் தனது அதிருப்த்தியை தெரிவித்துள்ளார். 22 மில்லியன் வீயூ குவித்த ஒரு டீசரில் எப்படி, இந்த மாதிரி தவறை ராஜமௌலி செய்தார் என அனைவருக்கும் குழப்பமாகவே உள்ளது. இயக்குனர் தரப்பு இதுவரை எந்த விளக்கமும் தரவில்லை.

Continue Reading
To Top