Connect with us
Cinemapettai

Cinemapettai

rrr

Videos | வீடியோக்கள்

ராஜமௌலி படத்தில் ஹீரோவை விட வில்லன் தான் மாஸ்.. வெளியான RRR பட அஜய் தேவ்கன் மோஷன் போஸ்டர்

இந்திய சினிமா உலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு உச்சத்தில் உள்ள இயக்குனர் என்றால் அது ராஜமௌலி தான். பாகுபலி பாகுபலி 2 ஆகிய படங்களின் மூலம் உலகப் புகழ்பெற்றவர்.

பாகுபலி படங்களுக்கு பிறகு தற்போது தனது அடுத்த படத்தின் அறிவிப்பை ராஜமௌலி சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டார். அதில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர்களான ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் ஆகிய இருவரும் இணைந்து RRR என்ற படத்தில் நடித்திருந்தனர்.

பாகுபலி படங்களுக்குப் பிறகு ராஜமௌலி கிட்டத்தட்ட 400 கோடி செலவு செய்து தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களை வைத்து ரத்தம் ரணம் ரௌத்திரம்(RRR) எனும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் வருகின்ற அக்டோபர் 13ஆம் தேதி 2021 ஆம் ஆண்டு வெளியாகப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்திய சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த படத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோரின் கதாபாத்திரங்கள் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் பாலிவுட் நடிகரான அஜய் தேவ்கன் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு RRR படக்குழுவினர் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

RRR-ajay-devgn-look

RRR-ajay-devgn-look

பாகுபலி படங்களின் வெற்றியை இந்த படம் எப்படியாவது ஓரம்கட்டிய ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் மிகவும் பிரமாண்டமாக உருவாக்கியுள்ளாராம் ராஜமௌலி.

Continue Reading
To Top