பெங்களூர் அணிக்கு எதிரான லீக் போட்டியில் புனே அணி 61  ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.

ஐ.பி.எல் பத்தாவது சீசனின் 34வது லீக் போட்டியில் புனே அணியும் பெங்களூர் அணியும் பலப்பரீட்சை செய்தன.

இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் கோஹ்லி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய புனே அணிக்கு அந்த அணியின் கேப்டனான ஸ்மித் 45 ரன்களும், மனோஜ் திவாரி 44 ரன்களும் எடுத்து கைகொடுக்க 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த புனே அணி 157 ரன்கள் எடுத்தது.

அதிகம் படித்தவை:  முன்னாள் தமிழக வீரரை பௌலிங் கோச் ஆக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் !

இதனையடுத்து 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணி வீரர்கள் அந்த அணியின் கேப்டனான விராத் கோஹ்லியை மட்டும் தன்னந்தனியாக போராட விட்டுவிட்டு அடுத்தடுத்து விக்கெட்டை  இழந்து வெளியேறினர். கோஹ்லியும் 48 பந்துகளுக்கு 55 ரன்கள் எடுத்தபோது விக்கெட்டை இழக்கவே 20 ஒவர் முடிவில் 9 விக்கெட்டுகளை  இழந்த பெங்களூர் அணியால் 96 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

அதிகம் படித்தவை:  என் பேண்ட்டை விற்றாவது தோனியை வாங்கியே தீருவேன்..! சாருக் கான் சபதம் !

புனே அணியில் அதிகபட்சமாக இம்ரான் தாஹிர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.