கொல்கத்தா அணிக்கு எதிரான லீக் போட்டியில் புனே அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

ஐ.பி.எல் பத்தாவது சீசனின் இன்றைய லீக் போட்டியில் கொல்கத்தா அணியும் புனே அணியும் பலப்பரீட்சை செய்தன.

இதில் டாஸ் வென்ற புனே அணியின் கேப்டன் ஸ்மித் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு கம்பிர் 24, மணிஷ் பாண்டே 37, யூசப் பதான் 4 ரன்கள் ,கிராண்ட் ஹோமி  36, சூர்ய குமார் யாதவ்  30 என தட்டுதடுமாறி 20 ஒவரில் 8 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா அணி 155 ரன்களை எடுத்தது.

இதனையடுத்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்குடன் களமிறங்கிய புனே அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர் ரஹானே 11 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றினார். இவரை தொடர்ந்து களமிறங்கிய ஸ்மித்தும் 9 ரன்களில் விக்கெட்டை இழந்து வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார்.

துவக்கத்திலேயே இரு முக்கிய விக்கெட் விக்கெட்டுகளை இழந்ததால் புனே அணி வெற்றி பெற போராட வேண்டிய நிலை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மற்றொரு துவக்க வீரரான ராகுல் த்ரிப்பதி கொஞ்சம் கூட இரக்கம் காட்டாமல் கொல்கத்தாவின் பந்துவீச்சை சிதறடித்து மளமளவென ரன் குவித்தார்.

அடுத்ததாக வந்த மனோஜ் திவாரி 8 ரன்களிலும், ஸ்டோக்ஸ் 14 ரன்களிலும், தோனி 5 ரன்களிலும் வெளியேறினாலும் தொடர்ந்து அசராமல் அடித்த த்ரிப்பதி   குல்தீப் யாதவின் ஒரு ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்கவிட்ட த்ரிப்பதி 52 பந்துகளுக்கு 7 சிக்ஸர் மற்றும் 9 பவுண்டர்களுடன் 93 ரன்கள் எடுத்திருந்தபோது கேட்ச் கொடுத்து வெறும் 7  ரன்னில் சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

கடைசி ஒரு ஓவருக்கு 5 ரன்கள் தேவை என்ற நிலையில் அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் சிகஸர் அடித்து தோனி  ஸ்டைலில் போட்டியை நிறைவு செய்தார் கிறிஸ்டியன்.

ராகுல் த்ரிப்பதியின் அதிரடி ஆட்டத்தின் மூலம் புனே அணியின் தோல்வி அடையாத அணி என்ற கொல்கத்தாவின் வரலாறு மாற்றப்பட்டுள்ளது.