Tamil Cinema News | சினிமா செய்திகள்
வெற்றிமாறனின் பிரமாண்ட வெற்றி படத்தில் நடிக்க மறுத்த சாய் பல்லவி.. வாய்ப்பை தவற விட்டபின் புலம்பல்!
நடிகர் தனுஷ் நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியாகி மெகா ஹிட்டான படம் தான் ‘அசுரன்’. இந்தப் படத்தில் தனுஷ் தன்னுடைய அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் பிரமிக்க வைத்தார்.
மேலும் தாணு தயாரித்த தயாரித்திருந்த இந்த படத்திற்கு தனுஷின் ஜோடியாக பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர் நடித்து இருந்தார் என்பது நாம் அறிந்ததே.
இந்தப் படத்தில் தனுஷின் மூத்த மகனாக சிங்கர் டிஜே, இளைய மகனாக நடிகர் கருணாஸின் மகனான கென் கருணாஸ் ஆகியோர் தாறுமாறாய் நடித்து படத்திற்கு வெற்றியை ஈட்டி தந்தனர். இந்த படம் 100 நாட்களை கடந்து தியேட்டர்களில் மாபெரும் வெற்றியை கண்டது.
இந்நிலையில் ‘அசுரன்’ படத்தில் தனுஷுடன் நடிக்க அழைத்ததற்கு சாய் பல்லவி மறுப்பு தெரிவித்து உள்ளார் என்ற செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதாவது இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க வெற்றிமாறன் சாய்பல்லவியை தான் முதலில் தேர்வு செய்துள்ளார். ஆனால் தனக்கு அந்த கதாபாத்திரத்தின் மீது ஈடுபாடு இல்லை என்று கூறி சாய் பல்லவி நடிக்க மறுத்துவிட்டார்.
இவ்வாறிருக்க சாய் பல்லவி ஏன் அனைவராலும் பேசப்பட்ட கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை என்று ஆராய்ந்த போதுதான் அவர் எடுத்த முடிவு கரெக்ட் என்று தோன்றுகிறது.
ஏனெனில் சாய்பல்லவியை வெற்றிமாறன் நடிக்க அழைத்தது மஞ்சுவாரியர் நடித்த பச்சையம்மாள் கதாபாத்திரத்திற்காக அல்ல. அம்மு அபிராமி நடித்த தனுஷின் அக்கா மகள் கதாபாத்திரத்திற்கு தான் நோ சொன்னாராம் சாய் பல்லவி.

sai pallavi
இருந்தாலும் தனுஷ், சாய்பல்லவி ஜோடியை மீண்டும் திரையில் ஒன்றாக பார்க்க முடியவில்லையே என்ற வருத்தத்தில் இருக்கின்றனர் ரசிகர்கள்.
