Connect with us
Cinemapettai

Cinemapettai

bharathikannama-

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சீரியலுக்கு முழுக்கு போட்ட பின் கெட்டப்பை மாற்றிய கண்ணம்மா.. வைரல் புகைப்படம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் தொடர்களில் மக்கள் மனதில் நல்ல வரவேற்ப்பை பெற்ற தொடர் பாரதி கண்ணம்மா. இத்தொடரின் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சின்னத்திரை ரசிகர்களை கவனத்தை ஈர்த்தார்.

ரோஷினி ஹரிப்ரியன் சமீபத்தில் சினிமா வாய்ப்பு கிடைத்திருப்பதால் திடீரென பாரதிகண்ணம்மா தொடரில் இருந்து விலகிவிட்டார். ரோஷினி திடீரென வெளியேறியது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் பாரதி கண்ணம்மா தொடரில் ரோஹினியின் கடைசி சூட்டிங் நாளில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு செல்வதால் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ச்சியாக பாரதி கண்ணம்மா குழு ரோஷினியை அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் ரோஷினி சூர்யாவின் ஜெய்பீம், ஆர்யாவின் சார்பட்டா பரம்பரை ஆகிய பட வாய்ப்புகளை நடிக்க மறுத்துவிட்டார் என்ற தகவல் வெளியானது. செங்கேணி, மாரியம்மா இந்த இரண்டு கதாபாத்திரங்களும் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தனர். இந்த வாய்ப்பை ரோஷினி தவறவிட்டார் என்று ரசிகர்கள் மத்தியில் கவலை இருந்தது.

roshni haripriyan

roshni haripriyan

பாரதி கண்ணம்மா தொடரின் மூலம் பல ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள ரோஷினி, சமீபத்தில் அதிகம் வெளியில் தெரியாமல் இருப்பதால் ரசிகர்கள் அவரை மறந்துவிடுவார்கள் என தற்போது இன்ஸ்டாகிராமில் அவரது புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

பாரதிகண்ணம்மா தொடரில் புடவை அணிந்து குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் நடித்த ரோஷினி தற்போது சீரியல் விட்ட போன பிறகு கெட்டப்பை மாற்றிவிட்டார். நிஜ வாழ்க்கையில் மாடலிங் துறையில் மூலம்தான் சின்னத்திரையில் வந்தார். இதனால் மாடர்ன் உடையில் எடுத்த அவரது புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Continue Reading
To Top