Connect with us

Cinemapettai

தண்ணீர் கேன் விற்று பிழைக்கிறேன்.. முன்னாள் ரூட் தல மாணவரின் கண்ணீர் வாக்குமூலம்

root-thala-water-business

Tamil Nadu | தமிழ் நாடு

தண்ணீர் கேன் விற்று பிழைக்கிறேன்.. முன்னாள் ரூட் தல மாணவரின் கண்ணீர் வாக்குமூலம்

‘தண்ணீர் கேன் விற்று பிழைப்பு நடத்தும் முன்னாள் ‘ரூட் தல’ மாணவர் ஒருவரின் கண்ணீர் கதையை விழிப்புணர்வு வீடியோவாக சென்னை போலீசார் வெளியிட்டு உள்ளார்கள்.

கல்லூரி செல்வதற்காக பேருந்தில் ஏறும் மாணவர்கள் அந்தப் பேருந்தில் யாரு ரூட் தல என்பதில் கடும் போட்டியை உருவாக்கி அதற்காக அடிதடியும் இறங்குகிறார்கள்.

அண்மையில் நடந்த மோதல் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பட்டாக்கத்தியுடன் மாணவர்கள் அடித்துக் கொண்ட சம்பவம் சென்னையில் மிகப்பெரிய விளைவுகளையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியது.

இதை அடுத்து ‘ரூட் தல’ மாணவர்களின் மோதலை முற்றிலுமாக தடுக்கும் வகையில் சென்னையில் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தனர்.

சென்னையில் மொத்தம் உள்ள அனைத்து பேருந்துகளிலும் உள்ள ரூட் தலைகளை தூக்கி வந்து அவர்களை நிற்கவைத்து இனி எந்த வன்முறையிலும் எந்த தவறான செயல்களில் ஈடுபட மாட்டோம் என உறுதிமொழி வாங்கி அதை வீடியோ எடுத்து போலீசார் வெளியிட்டனர்.

மேலும் மோதலில் ஈடுபடும் மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளனர்.

இதேபோல முன்னாள் ‘ரூட் தல’ மாணவர்களை தேடி பிடித்து, அவர்களின் இன்றைய நிலைமையை அவர்களையே பேசவைத்து வீடியோ படமாக விழிப்புணர்வுக்காக போலீசார் வெளியிட்டு வருகிறார்கள்.

இந்த விழிப்புணர்வு வீடியோவில் முன்னாள் ‘ரூட் தல’ மாணவர் ஒருவர் தனது கண்ணீர் கதையை உருக்கமாக பேசியுள்ளார். அதன் விவரம் வருமாறு:-

நான் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்தேன். அம்பத்தூரில் இருந்து மந்தைவெளி செல்லும் 41-டி வழித்தட பஸ்சில் நான் ‘ரூட் தல’யாக செயல்பட்டேன். எனக்கு பின்னால் எப்போதும் 50 மாணவர்கள் சூழ்ந்திருப்பார்கள். 3 வருட கல்லூரி வாழ்க்கையில் நான் ஹீரோவாக, கெத்தாக செயல்பட்டேன்.

பஸ் டிரைவர்-கண்டக்டர் பேச்சை காது கொடுத்து கேட்கமாட்டோம். அந்த வாழ்க்கை ஜாலியாக இருந்தது. நாங்கள் போகும் பஸ்சில் நாங்கள் தான் ‘மாஸ்’ஆக இருப்போம். எங்களை மீறி செல்லும் மாநிலக்கல்லூரி, நந்தனம் கலைக்கல்லூரி மாணவர்களை அடித்து உதைப்போம்.

எனது குடும்பம் மிகவும் ஏழ்மையானது. எனது தந்தை மாற்றுத்திறனாளி. தாயார் கூலி வேலை செய்தார். அந்த வருமானத்தில் தான் என்னை படிக்க வைத்தனர். 3 மாணவர்களை அடித்து உதைத்த சம்பவத்தில் டி.பி.சத்திரம் போலீசார் என் மீது வழக்குப்போட்டு கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.

நான் சிறையில் இருக்கும்போது சக மாணவர்கள் யாரும் என்னை பார்க்க வரவில்லை. உதவிக்கும் வரவில்லை. எனக்காக என் பெற்றோர்தான் கதறி அழுதார்கள். 9 நாட்கள் சிறையில் இருந்தேன். அப்போது தான் எனது நிலையை உணர்ந்தேன். 3 வருடங்கள் ஹீரோவாக இருந்தேன். அது பெரிய விஷயமாக எனக்கு அப்போது தெரிந்தது. கல்லூரியில் இருந்து வெளியே வந்த பிறகு தான், என்னைப்பற்றி எனக்கு புரிந்தது. என் மீதுள்ள வழக்கு என்னை பின்தொடர்ந்தது.

நான் போலீஸ் வேலைக்கு தேர்வானேன். எழுத்து மற்றும் உடல் தேர்வில் வெற்றி பெற்றேன். ஆனால் என் மீதுள்ள வழக்கு எனக்கு வேலை கிடைப்பதற்கு தடையாக இருந்தது. வேலை பார்க்க வேண்டிய நான் குற்றவாளியாக நின்றேன்.

எனது நிலையை நினைத்து கண்ணீர் வடித்தேன். 3 வருடமாக என்னை ஹீரோவாக பார்த்தவர்கள் எல்லாருமே, அப்போது காணாமல் போய்விட்டார்கள்.

என்னை ஜீரோ ஆக்கிவிட்டு அவர்கள் எங்கோ ஹீரோவாக இருக்கிறார்கள். எனது கனவு தகர்ந்து போனது.

இப்போது தண்ணீர் கேன் விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வருகிறேன். என்னை போல இப்போது ‘ரூட் தல’யாக செயல்படும் மாணவர்கள் எனது வாழ்க்கையை நினைத்து பாருங்கள். இதை அறிவுரையாக சொல்லவில்லை. அனுபவத்தில் சொல்கிறேன். ‘ரூட் தல’யாக மாறி உங்கள் வாழ்க்கையை கெடுத்து கொள்ளாதீர்கள். இவ்வாறு அவர் வீடியோவில் பேசியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top