இறுதிச்சுற்று என்ற ஒரே படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தவர் ரித்திகா சிங். படத்தை பார்த்தவர்கள் அனைவரும் மாதவனை விட ரித்திகாவை தான் புகழ்ந்து தள்ளுகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில், ‘படத்தில் என் கதாபாத்திரம் மிகவும் கலகலப்பாக இருப்பது போல் அமைக்கப்பட்டிருந்தது.

ஆனால், நான் கொஞ்சம் முரட்டு தனமாக இருக்க, இயக்குனர் என்னிடம் நிறைய வேலை வாங்கி தான் நடிக்க வைத்தார்.

அதிலும் மாதவனிடம் ரொமான்ஸாக பேச கடைசி வரை முடியவில்லை, ரொமான்ஸ் ஆக எப்படி பேசுவது என்றும் தெரியவில்லை, அந்த காட்சியில் மிகவும் கஷ்டப்பட்டு நடித்தேன்’ என கூறியுள்ளார்.