Connect with us

Cinemapettai

கமலஹாசனை மிரட்ட வரும் பகத் பாசில்.. எதிர்பார்ப்பை தூண்டும் விக்ரம் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema KisuKisu

கமலஹாசனை மிரட்ட வரும் பகத் பாசில்.. எதிர்பார்ப்பை தூண்டும் விக்ரம் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

கோயம்புத்தூரை சேர்ந்தவர் லோகேஷ் கனகராஜ். காலேஜ் முடித்த பின்பு பேங்க் வேலையில் சேர்ந்தார். எனினும் சினிமா மீது தீராத காதல் உடையவர், கமலின் வெறித்தனமான ரசிகன். அவர் படங்கள் தான் இவர் சினிமாவுக்கு வர இன்ஸபிரேஷன். குறும்படங்கள் எடுக்க ஆரம்பித்து பின் சினிமா என்ட்ரி கொடுத்தவர்.

மாநகரம், கைதி, மாஸ்டர் பட வெற்றியை தொடர்ந்து கமலுடன் இணைந்தார் லோகேஷ் கனகராஜ். கமலின் 232-வது படம் ‘விக்ரம்’. கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக கமிட் ஆன சத்யன் சூரியன் சமீபத்தில் விலகினார், கிரீஸ் கங்காதரன் கமிட் ஆகியுள்ளார்.

இப்படத்தில் கமல் வயது முதிர்ந்த சீனியர் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார் என்பது உறுதியான தகவல்.

kamal anthony vargehsee vikram

கதைப்படி சாட்சி சொல்ல இருக்கும் ஆந்தனி வர்கீஸை, (தாதா) விஜய் சேதுபதி மற்றும் அவரது கேங்கிடம் இருந்து காப்பாற்ற வேண்டுமாம் விக்ரம் (கமல்). நடிகர் பஹத் பாசில் (போலீஸ் அதிகாரி) ரோலில் வில்லன் சேதுவுக்கு ஆதரவாக கமலுக்கு எதிராக செயல்படும் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

கொரோனா பரவல் குறைந்த பின் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு உள்ளனர் படக்குழு.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top