fbpx
Connect with us

Cinemapettai

தமிழ் சினிமாவை நம்பினால் கஞ்சிக்கு லாட்டரி தான்.. தெலுங்கு பக்கம் முன்னணி நடிகையுடன் களமிறங்கும் விஜய் சேதுபதி

India | இந்தியா

தமிழ் சினிமாவை நம்பினால் கஞ்சிக்கு லாட்டரி தான்.. தெலுங்கு பக்கம் முன்னணி நடிகையுடன் களமிறங்கும் விஜய் சேதுபதி

செம்பருத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரோஜா. ஒரு காலத்தில் முன்னணி நடிகர்களுடன் போட்டிபோட்டு நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றவர்.

இவர் தற்போது அரசியலில் முழு கவனம் செலுத்தி வரும் சூழ்நிலையில், சினிமாவில் தலைசாய்த்து உள்ளாராம். அதாவது விஜய்சேதுபதிக்கு வில்லியாக மாறியுள்ளார் ரோஜா. மாஸ்டர் படத்துக்கு பின் ‘உப்பண்ணா’ என்ற படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.

2015ஆம் ஆண்டு ‘என் வழி தனி வழி’ படத்தில் நடித்த ரோஜா மீண்டும் 5 வருடம் கழித்து ரீ-என்ட்ரி கொடுக்க  உள்ளாராம், இந்த படத்தில் ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் ரோஜா.

அரசியல் வாழ்க்கை தாண்டி சினிமாவிலும் வெற்றி பெற வேண்டும் என்று இவர் எடுத்துள்ள முயற்சிக்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்ப்பை தட்டி செல்வார் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார்.

விக்ரம் வேதா படத்தின் மூலம் வில்லனாக விஸ்வரூபம் எடுத்த விஜய் சேதுபதி தற்போது பல மொழிகளில் வில்லனாக கலக்கி வருவதை ரசிகர்களுக்கு கொண்டாடி வருகின்றனர்.

விஜய் சேதுபதியின் சமீபத்திய படங்கள் தமிழ் சினிமாவில் வெற்றி பெறாமல் தடுமாறி வருவதால் மற்ற மாநிலங்களிலும் தன்னுடைய மார்க்கெட்டை அதிகப்படுத்த மற்ற மொழிகளிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top