Connect with us
Cinemapettai

Cinemapettai

roja-manirathinam-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அரவிந்த்சாமியுடன் ஜோடி சேர ஏங்கிய பிரபல நடிகை! இதை செய்து தனது ஆசையை தீத்து கொண்டாராம்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்னம் எழுதி இயக்கிய சூப்பர் ஹிட் படமான ‘ரோஜா’ படமானது 90களில் வெளியான மிகச்சிறந்த படங்களில் ஒன்றாகும்

இந்தப் படத்தில் அரவிந்த்சாமி, மதுபாலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் இந்தப் படத்தில் இடம்பெற்ற எல்லா பாடல்களும் இன்றுவரை ரசிகர்களை மெய்மறந்து கேட்கவைக்கிறது.

இந்தப்படத்தில் நவீனகால சத்தியமானுக்கும் சாவித்திரிக்கும் இடையேயான உறவை இயக்குனர் அழகாக சித்தரித்திருப்பார். ஏனென்றால் காஷ்மீரில் போராளிகளால் கடத்திச் செல்லப்பட்ட தன் கணவனை மீட்கும் கிராமத்துப் பெண்ணின் கதைதான் இந்த படம்.

கதாநாயகிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் இந்தப்படத்தில் நடிகை மீனா தான் கதாநாயகியாக நடிக்க தேர்வு செய்யப்பட்டிருந்தார். கால்ஷீட் பிரச்சினை இருந்ததால் இந்த படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பையும் தவறவிட்டார் நடிகை மீனா.

ரஜினி, கமல், சரத்குமார், சத்யராஜ், விஜயகாந்த் போன்ற பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்த நடிகை மீனா, இன்றுவரை அரவிந்த்சாமி உடன் சேர்ந்து ஒரு படம் கூட பண்ண முடியாமல் போனதே! என்று ‘ரோஜா’ பட வாய்ப்பை தவற விட்டதற்கு இன்றளவும் கவலைப்பட்டு வருகிறார்.

தற்போது சினிமாவில் ‘தெறி’ படத்தின் மூலம் என்ட்ரியான மீனாவின் மகள் நைனிகாவை ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தில் அரவிந்த்சாமியுடன் நடிக்க வைத்து மீனா தனது மனசை தேற்றிக் கொண்டாராம்.

மீனாவின் ஆசையை நிறைவேற்றிய மகளாக இந்தப் படத்தில் நைனிகா அரவிந்த்சாமியுடன் பிரமாதமாக நடித்திருப்பார். ரசிகர்கள் மத்தியில் இந்தப் படமானது நல்ல வரவேற்பை பெற்றது.

Continue Reading
To Top