நடிகை ரோஜாவின் இயற்பெயர் ஸ்ரீலதா. இவர் ஆந்திராவில் பிறந்தவர். ரோஜா தமிழ், தெலுங்கு சினிமா என இரண்டு சினிமாவிலும் இரட்டை குதிரை சவாரி செய்தவர். ரோஜா மற்றும் செல்வமணி ஒரு கால கட்டத்தில் தென்னிந்திய சினிமாவின் டாப் காதல் ஜோடிகள் என்று தான் சொல்ல வேண்டும். பின்னர் ஆந்திர அரசியலில், YSR காங்கிரஸ் சார்பில் ஜெயித்து சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர்.

இந்நிலையில் நேற்று திருப்பதியில் இருந்து, ஹைதராபாத் செல்லும் இண்டிகோ – 6E 7117 விமானத்தில் ரோஜாவும் பயணித்துள்ளார். இரவு 10 , 30 மணியளவில் விமானம் தரையிறங்கியபோது, தீடிர்ரென டயர் வெடித்துச் சிதறியுள்ளது. மேலும் டயர் வெடித்த இடத்தில் தீ பிடித்ததாம். விமான நிலையத்தில் உள்ள தீயணைப்பு வீரர்கள் உடனடியாக விரைந்து வந்து தீயை அணைத்துள்ளனர். பின்னர் அணைத்து பயணிகளையும் விமான நிலைய அதிகாரிகள் பத்திரமாக கீழே இறக்கினார்களாம்.

இந்த டயர் வெடித்த விவகாரத்தால் ரன் வே மூடப்பட்டு, ஹைதராபாத் சென்ற 6 விமானங்கள் சென்னை விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டதாம்.

ரோஜா, சகப் பயணிகளுடன் உயிர் தப்பிய தருணத்தை வீடியோ காட்சியாகப் பதிவு செய்து ஒருவர் யூ டியூப்பில் அப்லோட் செய்துள்ளார்.

“வி ஆர் சேப்” என ரோஜா சொல்லும் இந்த வீடியோ இணையத்தில் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.