fbpx
Connect with us

Cinemapettai

அம்மா 8 அடி பாஞ்சா, 16 அடி பாயும் ரோஜாவின் மகள்.. ஒத்த புகைப்படத்திற்கே குவியும் பட வாய்ப்பு

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அம்மா 8 அடி பாஞ்சா, 16 அடி பாயும் ரோஜாவின் மகள்.. ஒத்த புகைப்படத்திற்கே குவியும் பட வாய்ப்பு

தமிழ் சினிமாவில் 90களில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்த நடிகை ரோஜா 2002 ஆம் ஆண்டு வரை தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் எக்கச்சக்கமான படங்களில் ஹீரோயினாக வலம் வந்தவர்.

நடிகை ரோஜாவிற்கும் தெலுங்கு மற்றும் தமிழ் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் ஆந்திராவில் முக்கியமான கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் 1999 ஆம் ஆண்டிலிருந்தே தன்னை இணைத்துக்கொண்டார்.

ஒரு பக்கம் நடிப்பு ஒரு பக்கம் அரசியல் ரொம்ப பிஸியா இருந்த ரோஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் பிரபல இயக்குனர் செல்வமணி. தற்போது இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது.

திருமணத்திற்கு பிறகு நடிப்பதில் அவ்வளவு ஆர்வம் காட்டாத ரோஜா, அதன்பின் முழுநேரமும் அரசியலில் குதித்துவிட்டார். தற்போது இவர் ஆந்திராவின் நகரி சட்டமன்ற தொகுதியில் எம்.எல்.ஏ.வாகவும், மாநில மகளிர் தலைவராக பணியாற்றி வருகிறார். இந்த கொரோனா காலத்திலும் மக்களுக்கு ஒரு சில நல உதவிகளை செய்து வருகிறார்.

அண்மையில் ரோஜாவின் மகள் அன்சுமலிகாவின் 17-வது பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடி தெறிக்க விட்டாங்க. அதுமட்டுமல்லாமல் கொஞ்ச நாளாவே மகளுடைய ஃபோட்டோவை தனது ட்விட்டர் பக்கத்தில் அப்லோட் செய்து லைக்குகளை தட்டி செல்கிறார்

செம்பருத்தி படத்துல ரோஜா இருந்த அழகு காட்டிலும் மிஞ்சும் அழகுடன் நெடுநெடுன்று வளர்ந்து நிற்கும் அன்சுமலிகாவை பார்த்து மெய்மறந்து நெட்டிசன்கள், ரோஜாவை டம்மி ஆக்கி, மகள வர்ணித்து புகழ்ந்து தள்ளுகின்றனர்.

roja

roja

சைலண்டா, சினிமாவுல தனது மகளை என்ட்ரி ஆகணும்னு, மகளுடைய போட்டோவை அப்லோட் செய்கிற ரோஜாவின் பிளான கற்பூரமா கப்புனு புடிச்சுக்கிட்டா தயாரிப்பாளர்கள் அன்சுமலிகாவை நோக்கி படையெடுக்க தொடங்கிடாங்க.

roja

roja

Continue Reading
To Top