fbpx
Connect with us

Cinemapettai

இனி ரோஜா நினைத்தால்தான் மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டம்லாம்.. ஜெகன் மோகன் ரெட்டி புது திட்டம்

Politics | அரசியல்

இனி ரோஜா நினைத்தால்தான் மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டம்லாம்.. ஜெகன் மோகன் ரெட்டி புது திட்டம்

ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சி மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய அளவில் அவருக்கு பெரும் வரவேற்பு பெற்று வருகிறார்.

இந்த தேர்தலின் வெற்றிக்கு முக்கிய காரணமாகவும், தற்போது பக்கபலமாக இருப்பது நடிகை ரோஜா. இவர் பிரச்சாரம் செய்த அனைத்து தொகுதிகளிலும் ஓ எஸ் ஆர் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது.

இவருக்கு முக்கியமாக அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜெகன்மோகன் ரெட்டி பதவி வழங்காத காரணத்தினால் பெரும் வருத்தம் அடைந்தார்.

ஆனால் தற்போது ஒரு புதிய திருப்பமாக ஆந்திரப் பிரதேச தொழிற்துறை உள்கட்டமைப்புக் கழகத்தின் தலைவராக ரோஜா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ரோஜாவின் அரசியல் வாழ்க்கைக்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றி என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.  இந்த பதவியின் மூலம் தான் புதிய தொழில் துறைகள் அமைக்கப்படுவது, நிறுத்தப்படுவது, மொத்த தொகையை கணக்கிடுவது என்று பல முக்கிய பொறுப்புகள் உள்ளது. இனி ரோஜா நினைத்தால்தான் மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டம்லாம் வர முடியும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top