Tamil Cinema News | சினிமா செய்திகள்
தலைவர் தான் என் சினிமான்ற போதைக்கு கஞ்சா – நான் ரஜினின்ற போதைக்கு அடிமை – ரோஹித் நந்தகுமார்.
Published on
ரோஹித் நந்தகுமார்
பெயரை கேட்டால் நமக்கு புதிதாக தோன்றும். எனினும் இவரது படைப்பு நம்மில் பலருக்கு அறிமுகமானவை. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்த குரும்படங்களின் தொகுப்பில் “அவியல்” இயக்கியது இவர் தான். மேலும் தற்பொழுது வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த “கள்ளச்சிரிப்பு” இயக்கி நடித்ததும் இவரே.

rohit nandakumar – nawazuddin siddiqui
சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் சூப்பர் ஸ்டாரின் பிரம்மாண்ட படத்தின் நட்சத்திரப்பட்டாளத்தில் இவரும் ஒருவர். சமீபத்தில் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரஜினி அவர்குளுடன் நடிப்பதால் வரும் ஆனந்தத்தை கஞ்சாவுடன் உவமைப்படுத்தி ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார்.

rohitsview
படையப்பா பார்த்து வளர்ந்து, அவருடன் நடித்ததால் அடைந்த மகிழ்ச்சியை இந்த பதிவின் வாயிலாக தெரிந்துகொள்ள முடிகின்றது.
