Sports | விளையாட்டு
தவறை புரிந்து கொண்டு உருகிய பிரபல வீரர்.. நானே அவுட்டாகி இருக்க வேண்டும் என புலம்பல்!
அனைவரும் எதிர்பார்த்த ஐபிஎல் போட்டி நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்றது.மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல் அணிகள் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதலில் பேட்டிங் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் குவித்தது.
ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் அரைசதம் அடித்தனர். மும்பை அணி சார்பாக டிரென்ட் போல்ட் சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் 30 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளையும், குல்டர்நைல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் 157 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 18.4 ஓவர்களில் வெற்றி பெற்றது. ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷான் சிறப்பாக விளையாடி வெற்றி பெறச் செய்தனர்.
இந்த போட்டியில் சூரியகுமார் யாதவ் 19 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார். ரோகித் சர்மாவிற்காக தன் விக்கெட்டை தியாகம் செய்து வெளியேறினார் .
இந்த சுவாரசியமான நிகழ்வை போட்டி முடிந்த பின் ரோஹித் சர்மா தெரிவித்தார். மேலும் அவர் சூரியகுமர்காக தான் அவுட்டாகி இருக்க வேண்டும் என கூறினார்.

rohit-sharma
