Sports | விளையாட்டு
மந்தமாக ஆட்டத்தை வெளிப்படுத்திய தோனி கேதர் ஜாதவ்.! ரோகித் சர்மாவின் அதிரடி பேட்டி
நேற்றைய உலக கோப்பை போட்டிகள் இந்தியாவும் இங்கிலாந்து அணிகள் மோதிக்கொண்டன இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 337 ரன்கள் எடுத்திருந்தது அடுத்ததாக களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 306 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது அதனால் 31 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது இந்தியா.
இந்த தோல்விக்கு டோனி மற்றும் கேதர் ஜாதவ் தான் காரணம் என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாம்பவான்கள் முதல் ரசிகர்கள் வரை தங்களது கருத்தை கூறி வருகிறார்கள், ஏனென்றால் கடைசியாக 45 ஓவர் முடிவில் இந்தியா 267 ரன்கள் எடுத்திருந்தது, அதன் பிறகு களமிறங்கிய தோனி மற்றும் கேதர் ஜாதவ்க்கு 5 ஓவரில் 71 ரன்கள் எடுக்க வேண்டிய கடினமான இலக்கு இருந்தது. ஆனால் இதை அடிப்பதற்கு கொஞ்சம் கூட ட்ரை பண்ண வில்லை என பலர் விமர்சித்தார்கள்.
அதுமட்டுமில்லாமல் கடைசி 5 ஓவரில் இவர்கள் இலக்கை எட்டுவதற்காக விளையாடுகிறார்களா இல்லை ஓவரை முடிப்பதற்காக விளையாடுகிறார்களா என ரசிகர்கள் விமர்சனம் செய்தார்கள், இந்த நிலையில் தோனி மற்றும் கேதர் ஜாதவ் ஜோடி மந்தமான ஆட்டம் பற்றி விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா நியாயப்படுத்த விரும்புகிறார்கள், போட்டி முடிந்தவுடன் விராட் கோலி நியாயப்படுத்தினார், அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ரோகித் சர்மா, தோனி கேதர் ஜாதவ் பவுண்டரி அடிக்க முயற்சி செய்தார்கள் ஆனால் இங்கிலாந்து அணி மிகவும் மெதுவாக பந்து வீசியது அதனால் அவர்களால் பெரிய ஷாட் அடிக்க முடியவில்லை என ரோகித் ஷர்மா செய்தியாளர்களிடம் கூறினார்.
