Connect with us
Cinemapettai

Cinemapettai

ரோகித் சர்மா நீக்கப்பட்டதற்கு முக்கிய காரணம் இவர் தானாம்.! கடைசியாக வெளிவந்த உண்மை

dhoni-rohit-sharma-cinemapettai

Sports | விளையாட்டு

ரோகித் சர்மா நீக்கப்பட்டதற்கு முக்கிய காரணம் இவர் தானாம்.! கடைசியாக வெளிவந்த உண்மை

ரோகித் சர்மா ஆஸ்திரேலிய தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் முடிந்த உடன் ஆஸ்திரேலியா செல்லாமல் இந்தியா திரும்பினார் ரோகித்.

ஆனாலும், ரோஹித் சர்மா டெஸ்ட் தொடரில் ஆட தயாராக இருந்துள்ளார். எனினும், அவரை டெஸ்ட் தொடரில் சேர்த்தாலும், தற்போது அவர் ஆஸ்திரேலியா செல்ல முடியாது என பிசிசிஐ அவரை நிராகரித்ததாக பேசப்படுகிறது.

அவர் ஏன் ஐபிஎல் முடிந்து ஆஸ்திரேலியா செல்லாமல் இந்தியா வந்தார் என்பது குறித்து பல்வேறு காரணங்களை தெரிவிக்கின்றனர்.

அவரது தந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாகவும். அதன் காரணமாகவே அவர் ஐபிஎல் தொடர் முடிந்த உடன் மற்ற வீரர்களுடன் ஆஸ்திரேலியா செல்லாமல் இந்தியா வந்து, தன் தந்தையை சந்தித்தார் என கூறப்படுகிறது.

ரோஹித் தன் தந்தையை காணச் சென்றாலும் அவருக்கு காயம் இருந்தது. அவர் நேராக ஆஸ்திரேலியா சென்று இருந்தால் அங்கேயே உடற்தகுதியை நிரூபித்து டெஸ்ட் தொடரில் பங்கேற்றிருக்க முடியும்.

ஆனால் அவர் இந்தியா திரும்பியதால் தேசிய அகடாமியில், தனது உடல் தகுதியை நிரூபித்து சான்றிதழ் பெற வேண்டும். அவர் டிசம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியா சென்றாலும் 14 நாட்கள் குவாரன்டைன் இருக்க வேண்டும், அதற்குள் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துவிடும்.

இத்தனை சிக்கல்களுக்கும் காரணம் ரோஹித் சர்மா ஆஸ்திரேலியா செல்லாமல் இந்தியா வந்ததே, அதற்கு இப்போது விடை கிடைத்து உள்ளது.

Rohit-Sharma-Cinemapettai

Rohit-Sharma-Cinemapettai

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top