Sports | விளையாட்டு
மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் இறுதி போட்டிக்கு சென்றாலும், ரோகித் விளையாட மாட்டார்.! ஷாக்கான ரசிகர்கள்
மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா இடது தொடையில் காயம் ஏற்பட்ட காரணத்தினால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்கவில்லை. அதன்பின் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் பெங்களூருக்கு எதிரான போட்டியிலும் பங்கேற்கவில்லை.
அவருக்கு பதிலாக பொல்லார்ட் அணியின் கேப்டனாக விளையாடினார். மேலும் காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் மூன்று விதமான போட்டிகளிலும் ரோஹித் சர்மா இடம் பெறவில்லை.
அவரின் காயத்தின் தன்மையை நிச்சயம் தெளிவாக சொல்ல வேண்டும் என்று பலரும் கேட்டிருந்தனர். கவாஸ்கரும் அவரது உடற்தகுதி குறித்த தெளிவான தகவலை வெளியிடுமாறும் கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்நிலையில் அவர் காயத்தின் தன்மையை அறிந்து குறைந்தது மூன்று அல்லது நான்கு வாரங்கள் ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
அதன் பின்னர் அவருக்கு முழு உடல் தகுதி தேர்வு நடைபெற்ற பின், அவர் ஆஸ்திரேலிய தொடரின் பாதியில் பங்கு பெறுவதை பற்றி யோசிக்க படும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்த வருட ஐ.பி.எல் தொடரின் இறுதி போட்டிக்கு மும்பை அணி தகுதி பெற்றாலும், போட்டியிலும் ரோஹித் விளையாடமாட்டார்.

rohit sharma
