fbpx
Connect with us

Cinemapettai

ரோஹித் செய்த இந்த செயல் தான் திருப்புமுனை – சச்சின் டெண்டுல்கர்

Sports | விளையாட்டு

ரோஹித் செய்த இந்த செயல் தான் திருப்புமுனை – சச்சின் டெண்டுல்கர்

ரோஹித் சர்மா – இந்திய கிரிக்கெட்டின் ஹிட் மேன். நிறைய பேட்ஸ்மேன்கள் டெஸ்ட் மேட்ச் லெவலில் இரட்டை சதம் அடிக்க தடுமாறும் சூழலில் ஒரு நாள் போட்டிகளில் அசால்டாக இரட்டை சதம் அடித்து அசத்துபவர். மனிதர் டெஸ்ட் மேட்ச் கேரியர் டேக் – ஆப் ஆகாமலே இருந்தது.

முரளி விஐய் ஓரங்கட்டப்பட, ராகுல் சொதப்ப, ப்ரித்வி ஷா தடையில் இருப்பதால், ரோஹித்துக்கு டெஸ்ட் போட்டிகளிலும் ஓப்பனிங் ஆடும் வாய்ப்பை இந்த தொடரில் வழங்கியது நிர்வாகம். அவரும் அதில் சிறப்பாக ஆடி கலக்கிவிட்டார். 244 பல்லில் 176 ரன்கள் குவித்தார். அதில் 23 பௌண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் அடக்கம்.

 

“ரோஹித் பிலாண்டர் வீசிய பந்தை இறங்கி வந்து எதிர்கொண்டதே திருப்புமுனையாக அமைந்தது. அவர் சிறப்பாக மூன்று ஓவர்கள் வீசினார். ஆனால் ரோஹித்தின் இந்த செயலால் விக்கெட் கீப்பர் ஸ்டம்ப் அருகில் வந்தார், அதன் பின் பௌலரின் லயன் மற்றும் லென்த் மாறியது. மனதளவில் நடந்த போட்டியில் ரோஹித் வெற்றி பெற்றார். அகர்வாலும் சிறப்பாக ஆடினார்.” என்பதே சச்சினின் பதிவு.

இந்நிலையில் சச்சின் ட்விட்டரில் பதிவிட்ட ஸ்டேட்டஸுக்கு பலரும்; ஆம் என ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top